விவிலிய இணைநூல் - கலிவெண்பாவில்

மோவாப் சமவெளியில் மோசே பயண வரலாறு சொல்லுதல்.

மோவாப் சமவெளியில் மோசே திருவினத்தார்
தேவை பயண வரலாறு -தீவாயாற்

செத்தார் முறுமுறுத்த மக்கள் அனைவரும்
செத்தார் கிளைகளே கேட்டாரே -அத்தமர்

சேயீர் மலைவழியாய் ஓரேபு சேர்ந்தோம்நாம்
நேயர் பதினொரு நாட்பயணம் -நேயர்நாம்

ஊடுசென்றோம் காதேசு பர்னேயா விட்டுநாம்
நாடியோர்தான் அக்கரையைச் சேர்ந்திட -வாடாத

யோர்தானின் அக்கரையில் மோசே திருவினத்தார்
சேர்ந்தவரை நோக்கி பகன்றானே -நேர்வேர்

எசுபோனில் சீகோன் முறியடித்தோம் ஓக்கும்
திசைஅத்த ரோத்தில் விழுச்செய் -திசையோர்

திருவினத்தின் நற்கிளைகாள் கேளீர் திருவார்
திருச்சட்டம் சொல்கின்றேன் நானே -திருவும்

திருச்சட்டம் தன்னை விவரித்துக் காட்ட
திருவினம் சேர்ந்தங்குக் கண்டு -திருவினமே

ஓரேபில் தங்கியது போதும் இனத்தாரே
ஓரேப்பை விட்டுநீர் செல்லுவீர் -சீரோர்

மலைவிட்டுப் போம்கானான் ஐப்பிராத்து ஆறு
அலைவரை போவீர் இனத்தார் -நலமே

இதோகாண்பீர் தேசத்தை உங்கள்முன் இட்டேன்
அதேநுந்தை மூவர்க்கு வாக்கென் -அதேநாடு

தந்தேன்நான் உம்கையில் செல்லும்நீர் சீராக
தந்தையர்க்குத் தந்தவாக்கு ஈந்தேன்யான் -அந்தயிடம்

பாரம் தனியாக உங்களின் நான்சுமக்க
பாரும் இடையோர் இருக்கட்டும் -பாரஞ்

சுமந்திட ஆகாது என்னாலே ஏனென்
தமையர் பெரும்மே மடங்காய் -தமரே

சுமைசுமக்க நன்றே; இனத்தார் சரியென்
அமைத்திட ஞானியரை ஆங்கு -அமையினம்

விண்மீன்போல் மித்திரளோர் சொல்கேட்டுத் தீர்த்தந்தேன்
மண்மேல் திருச்சட்டங் கள்தானே -மண்ணிலே

தீர்க்கும் நலநீதி யோரிடஞ் சொன்னேனே
தீர்க்கும்நீர் செய்யாதீர் மாந்தனின் -சீர்முகம்

கண்டு; இறைவனின் சட்டங்கள் கைக்கொண்டு
மண்ணில் சரியாகத் தீர்ப்பீர்நீர் -மண்தலை

ஆயிரம் நூறுக்கு பத்திற்கு நற்றலைவர்
சேயோர்க்கு வைத்திட்டோம் ஞானியர் -சேயோரால்

செய்யா ததைக்கொண்டு வாருமே என்னிடம்
மெய்த்தேவன் கேட்டுப் பகர்வேன்நான் -துய்யாக்

கடினமாய் பாலையில் சேர்ந்துவந்தோம் நாமும்
கடிதாக காதேசு பர்னேய் -அடிதேசம்

போகும் வழியை அறிந்திட ஒற்றரை
போகவிட சொன்னீர் இனத்தாரும் -போகல்

சரிதான் விடுவோம் நலஒற்றர் என்றே
சரியாண்கள் பன்னிருவர் தேர்ந்தே -வரையேறி

போய்வாரும் சீர்தேசம் எப்படியோ என்கண்டு
காய்கனி நீர்வாரும் கொண்டென்றேன் -வாய்கேட்டு

பன்னிருவர் சென்றார் எசுகோல் வரையிலே
நன்னாடு என்றவர் சொன்னாரே -பன்னிருவர்

தன்னிலே பத்துப்பேர் உம்மை கலங்கடித்தார்
அன்னார் பெரியோ ரினத்தாரே -என்றுநீர்

கூடார முள்ளே முறுமுறுத்தீர்; கர்த்தரவர்
வீடில்லா விட்டாரே எம்மையிங்கு -நாடவர்

மிப்பெரியோர் தானே; அவர்கையில் சாவோமே
தப்பே விடுத்தோம் எகிப்ததனை -அப்பாடி

வானுயர் பட்டிணங்கள் வானுயர் மாந்தர்கள்
ஏனோக்கு மாந்தர்கள் என்றிருப்பர் -ஏனோ

இனவொற்றர் சொன்னார் இதயங் கலங்க
இனமக்கள் போனீர் அழன்றே -இனத்தோரே,

மோசேநான் சொன்னேன்: திருக்கர்த்தர் உங்கள்முன்
தேசத்தில் சென்று உமக்காக -நீசர்மேல்

போரிட்டுச் சாய்ப்பார்; அழலாதீர் மக்களே
சேருவோம் நாடு சிறந்துநாம் -வேராரே

கர்த்தர் திருவினமே கேளீரோ வானிறைவன்
கர்த்தரும் தந்தை சுமப்பதுபோல் -கர்த்தர்

சுமந்தாரே தீத்தூண் முகிற்றூணாய் வந்த
சுமந்தவரை நீரும் மறந்து -அமைதியாய்த்

தங்கிடமும் காட்டில் திருவவரே சொன்னாரே
அங்கேநீர் போனீரே நம்பாமல் -தங்களிடம்

வெஞ்சினம் கொண்டாரே கர்த்தரும்; அஞ்சியோர்
தஞ்சயிடம் போகார் இனிமேலும் -அஞ்சியோர்

நும்சொல் லதுஐயோ பிள்ளைகள் கொள்ளையாவர்
நும்சொல் செவிக்கேட்ட கர்த்தரும் -நும்பிள்ளை

கொள்ளையாகார் தானே; அவர்போவர் நாடதுள்
அள்ளக் குறையா வளநாடு -கொள்ளொற்றர்

பன்னிருவர் தன்னிலே எப்புன்னே சேய்காலேப்
நன்றே பகன்றான் அதனாலே -நன்னாடுள்

போவான் அவன்மட்டும் என்றாரே போமாட்டாய்
தீவனம் விட்டு மகன்நீயும் -தேவனும்

உம்பொருட்டு என்னையவர் கானானுள் போகாயென்
உம்மாலே தானே இழந்தேன்நான் -நும்சொல்லால்;

நூன்சேயோன் யோசுவா போவான் இனமுன்னே
நான்தேர்ந்தேன் என்றார் சிறந்தவர் -வான்சொல்லோ

செங்கடல் வந்தவழி போவீர் பகன்றாரே
செங்கடல் வந்தவழி போகாது -இங்கேயாம்

பாவம்செய் தோமே எனச்சொல்லி வீரர்கள்
தீவம்பாய் செய்போனீர் போர்செய்ய -தீவம்பே

அச்சமயம் யானும் திருவினார்ச் சொல்சொன்னேன்
அச்சமின்றி போகின்றீர் விண்ணாரும் -இச்சமயம்

இல்லை உமதிடையே; என்றும் துணிகரமாய்
வல்லார் புரிந்தீரே போரங்கு -கல்லாற்ப்

புறமோடும் தேனீப்போல் மக்கள் விழுந்தீர்
புறநாட்டு மக்களிடம் தோற்று -அறனே

இனம்செய்தோம் வன்பாவம் என்று அழுத
இனம்சொல்லைக் கேளா தவர்

1
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தூயவரின் சொல்படி செங்கடலை நோக்கிநாம்
சேயீர் தனிலே திரிந்தோமே -தூயவர்

சொல்லும் வரைதிரிந்தோம்; சொல்வந்து சேயீரைச்
சொல்படி விட்டு வடதிசை -சொல்லாரும்

சேயீர் மலைநாடு ஏசா திருநாடு
சேயீருள் காணி கிடையாதே -சேயீர்

இனத்தாரோ அச்சப் படுவர் உனைக்காண்;
இனத்தார் விடுத்துச்செல் வீரே -இனத்தார்

மலைநாட்டில் ஊண்வாங்கி நீருக்கும் காசு
மலைநாட்டில் ஓரடியும் தாரேன் -மலைநாடு

ஏசா திருநாடே; கர்த்தர் அறிவாரே
தேசம்செல் நல்லாரின் பாடுகள் -ஏசா

வனம்வழியே வந்திடும் நல்லினத்தார் பாடு
அனைவரையும் செய்வித்த தேவன் -அனைத்தும்

அறிவாரே; ஏதும் குறைவின்றி வந்தோம்
செறிவாக நாற்பது ஆண்டு -நெறியாக

அந்தர வன்வெளியில் சென்றோமே சேயீரின்
வந்தநாம் ஏலாத் எசியோன்மேல் -அந்நாடு

மோவாபின் நாட்டின் வனம்வழி; கர்த்தர்சொல்
மோவாபை செய்யீர் இடும்புநீர் -மோவாப்நேர்

லோத்தின் இனமக்கள் ஆர்சீமை சொந்தமே
லோத்தின் இனக்காணி விட்டுவிடும் -லோத்தினம்

மேல்நீரும் போர்செய்யீர்; ஏனாக்கைப் போல்நெடி
வேல்ஏமி மக்கள் விரட்டினரே -வேல்கோல்கை

ஓர்சீமை வாழ்ஏமி மக்கள் மலைசேயீர்
பார்வாழ்ந்தார்; உம்மினம் போலேதான் -சீர்மகன்

ஏசா இனத்தார் விரட்டினர் ஏமியெனும்
பைசப் பிறப்பு களை

2
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருவவர் சொன்னார் நதியது சேரேத்
திருமக்கள் செல்வீர் கடந்து -திருச்சொல்

படியேநாம் சென்றோமே சேரேத் நதியை
கடந்து இனமக்கள் சேர்ந்தோம் -நடையாகச்

சேரேத் நதிகடக்க ஆயிற்று நாற்பதில்
சீராண்டு ஒன்றொடு ஒன்றுமாய் -சேராது

காதேசில் கர்த்தர் உரைத்தபடி போர்மக்கள்
தீதுசொல்லால் போயினர் மாண்டங்கே -வேதர்த்

திருக்கர்த்தர் சொன்னாரே ஆர்சீமை விட்டு
வரையம்மோன் சேர்கின்றீர் மக்கள் -வரையது

லோத்தின் இனத்தாரின் காணிதானே; ஆதலால்
தீத்தொன்றும் செய்யாது போமின்னே -தீத்தோன்

நதிஅர்னோன் நீர்கடந்து செல்மின் எசுபோன்
அதுவே அரசன் எமோரி -வதைவழி

சீகோனே; உம்கையில் தந்தேன் அவனைநான்
சீகோன் அழித்திடு நீவிர்தான் -தீகெனினும்

போர்விதி போர்செய்யும் முன்னே அறிவிப்பு
போர்செய்யா மக்கள் கடந்திடுவோம் -போர்செய்யா

ஏசாபோல் மோவாப்போல் விட்டுக் கடந்திட
தேசம் செலத்தா வழிசெல்வோம் -தேசத்தான்

சீகோனோ போர்செய்ய வந்தான் திருக்கர்த்தர்
சீகோன் மனதைக் கடினம்செய் -சீகோனை

ஆங்கே அழித்தோம்நாம் சொல்படியே செய்திட்டு
ஆங்கே குடிபுகுந்தோம் நாம்சிறப்பாய் -தீங்கில்

திருநமக்கு போர்செய்யீர் என்றே விலக்கம்
திருநாட்டை போர்செய்யா விட்டோம் -திருநாட்டில்

கீலேயாத் பட்டிணம் எல்கை வரையிலே
வேலாலே சாய்த்தோம் இனம்

3
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பாசான் வழிபோனோம் பின்நாம் திரும்பியே;
பாசான் அரசன் எதிர்த்தங்கு -வீசைப்போர்

எத்ரேய் வரத்திருவோ: அஞ்சாதே தேசத்தை
எத்ரேயி போரில்நீ வெல்வாய்நீ -மத்தாண்

எசுபோன் அரசனாம் சீகோன்செய்ப் போல
வசைசெய்வாய் என்றார். அதுபோல் -இசைதேவன்

சொல்படி மீதி யிராமல் முறியடித்தோம்
வல்லாண் அரசெமோரி ஓக்பெயர் -மல்லாண்

அறுபதாம் நீள்மதில் பட்டிணம் பாசான்
அறுபது போக மதிலில் -நறுநகர்

பன்மடங்கே கொண்டோம்நாம் பாசானில் சீர்வெற்றி
வன்னரசன் ஓக்கை முறித்துநாம் -அன்னவர்சொல்

எல்லா மனிதர் அழித்திட்டோம் சீகோன்போல்
எல்லா உடைமை நமக்காக -அல்லார்போல்

கொள்ளையிட்டு அஃறிணை மாக்கள் நமக்காக
கொள்ளையிட்டோம் சீர்நகர்கள் நாம்தானே -வெள்ளாறு

யோர்தானின் இப்புற அர்னோன் நதிதொடங்கி
ஏர்மோன் மலைவரை தேசத்தை -சீர்நாம்

எமோரியர் ஈரரசர் வென்றோம்நாம் ஏர்மோன்
எமோரியர் சேனீர் அழைத்தார் -எமோரின்

சமனான நாட்டின் அனைத்து நகரும்
அமைந்திட்ட கீலேயாத் எல்லாம் -சமநகர்

சல்காயி, எத்ரேயி ஓகினது பாசானில்
நல்லார் பிடித்தோமே அன்றுநாம் -வல்லாண்

எமோரி அரசனாம் ஓக்கின் படுக்கை
அமைரப்பா; நீளகலம் கேள்மின் -இமைக்கும்

மனிதரின் கைமுழமாய் ஒன்பதிற்கு நான்கு
மனிதப் பிறவியற்ற வன்

4
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
காத்ரூபன் பாதி மனாசே குலக்காணி
மேத்தாறு யோர்தானின் இப்புறமே -மாத்தவர்

சொல்படி யானோ நதிகடக்க ஏலாதே
சொல்லவர் முன்செய்மன் றாடிக்கேள் -வல்செய்

இதுவரை காணச்செய் மெய்த்தேவன் நீரே
மதுபாலோ டும்நாடு செல்ல -விதியெனக்கு

தந்திடுவீர் நற்றேவா என்றேயான் கேட்டிட
முந்தி மறுத்தார் இறைவனும் -மந்தாண்

இனிமேலும் பேசாதே நாட்டுள் செலநீ
இனிசொல் சினமேற்ப் படவும் -நனிசொல்

இனிதவர் நீதி யெனவே விடுத்தேன்
இனியும் செலமுடியா நாடுள் -நனிநீ

இதுபோதும் நாட்டுள்ளே யோசுவா செல்வான்
அதனாலே வைத்திடு நற்கை -இதமவன்

மற்றும் யெபுன்னேசேய் காலேப் தவிரவும்
மற்றெல்லா நாட்டார் அழிந்தனர் -மற்றாராம்

நட்டார்க்கு நல்நாடு பங்கிடுவான் யோசுவா
நட்டாரை மேற்கொண்டு முன்செல்வான் - நட்டார்

இரண்டரை கோத்திர ஆண்களோ செல்வர்
நருநாடு மற்றார் கொள

5
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பத்து கட்டளைகளை மீண்டும் நினைவூட்டி அடைக்கலப் பட்டிணங்கள் ஏற்படுத்தல்

இசுரேல் இனமே பிழைத்திருக்கத் தந்தை
இசுரேலின் தேவன் தருநற் -இசைக்காணி

தன்னிலே சேர்ந்து கடைப்பிடிப்பீர் என்சொல்லே
நன்றாம் நலநீதி என்றவன் -இன்றுநம்

தேவன் தரும்வாக்கில் ஒன்றும்நீ கூட்டாதே
தேவத் திருச்சொல் குறைக்காதே -தேவனல்லா

பாகால்பே யோனெனும் பேய்பின்னே சென்றமக்கள்
ஆகா தழித்தார் இறைவனும் -ஏகனவர்

தேவன் திருவிறை பற்றிய நீர்வாழ
தேவத் திருச்சொல்லைக் கேட்டேநான் -தேவச்சொல்

கட்டளை நீதியெனக் கற்பித்தேன் கட்டளைகள்
திட்டமாய்க் கைக்கொள் இனத்தாரே -சட்டங்கள்

கைக்கொள்வீர் கட்டளை நீதிகள் என்றென்றும்
கைக்கொள்தல் ஞானமும் நற்சான்றே -கைக்கொள்;

பலமக்கள் கட்டளைகள் நீதிகள் காண்பர்
பலமக்கள் கண்டு வியப்பர் - நிலத்தே

தொழுதிடும் போது நெருங்கிநிற்கும் நம்மின்
தொழுவிறைப்போல் பூமி தனிலே -தொழுவிறை

யாருண்டு? இந்நாள்போல் கட்டளை பெற்றவர்
யாருண்டு இப்புவி மீதும்காண்? -சீரவரை

ஓரேபில் நீகண்டாய் நல்லிறையின் நல்மகிமை
ஓரேபில் கார்முகில் மத்தியில் - சீரவர்

கண்டாய் எரிதழலில் கேட்டாய் ஒலிதனை
கண்டிலைநீ யாதுருவம் அங்குத்தான் -அண்ணாரும்

ஓரேபில் கற்பலகை ஈராகத் தந்தாரே
சீரவர் பத்தாகக் கட்டளை - சீரவர்

சொல்தனைக் கைக்கொண்டு கற்பி வழியார்க்கு
சொல்தனை மாறாது நீயென்றும் -நல்லூராம்

ஓரேபில் நீகண்ட நல்லிறைக்கு யாதுருவம்
சீரவர்க்கு ஆணோ யிலைப்பெண்ணோ - சீரவர்க்கு

செய்யாதே மாக்களோ அஃறிணையின் வீணுருவம்
செய்யாதீர் செய்கைக்குச் சீரின்றி -பொய்யூர்

எகிப்தென்னும் எஃகிரும்புக் காளவாய் விட்டுத்
தகைச்சேர் இனத்தை எடுத்தார் - நகைப்பிலா

தென்னையோ உங்கள் நிமித்தஞ் சினங்கொண்டு
நன்னாட்டில் சேராய் பிழன்றோனே -நன்னாடு

ஆதலால் நான்வர மாட்டேன் நதியின்மேல்
ஆதலால் நல்லினமே செய்வீர்நீர் -போதனை

ஏதும் தவறாதுக் கைக்கொள்மின் செய்யாதீர்
ஏதும் சிலையுமக்கு வீணாக -வேதன்

எரிச்சலுள்ள நற்றேவன் நம்மவரே தீயாம்
எரிச்சலூட்ட நீரும் சிலைசெய் -திரிந்திட்டால்

விண்பூமி சான்றாகும் உம்மெதிராய் என்றென்றும்
விண்வழி விட்டுப் பிழையாமே -விண்சொல்

பிழன்றுநீர் போனால் செலும்நாடு விட்டு
பிழைச்செய் இனத்தார் பழிபோம் -வழியார்

சிலையை வழிபட்ட காரணத்தால் போவர்
அலையடித்த மண்போற் சிதறி -பலவாய்ப்

பலுகிய வெண்ணார் அலுகிப்போம் நாட்டில்
அலுகி மரச்சிலை முன்னே -இலைபோல்

எலும்பாகிப் பின்னர் இறைவா எனநீ
நிலையில் அழைக்கவும் கேட்பார் -நிலையில்

முழுமனதும் நல்முழு வுள்ளுணர்வுந் தேட
வழுவை இரக்கத்தால் மன்னித் -தழுவ

அழுமுனை தாய்தேற்று மாப்போல் இறைவன்
கழிவிரங்கிச் செய்வார் நவின்று -குழந்தாய்

மறவார் உடன்படிக்கை நுந்தைக்குச் செய்தார்
மறந்தால் கடைநாளில் நீதி -மறவினத்தார்

பின்தொடர்ந்த தொல்லைகள் தன்னிலே தேடவும்
என்றும் விடாரேநுன் கைதன்னை -கன்றே

உருவாக்கி நீபிறந்த நாள்முதலாய் இங்கே
உருச்செய்த ஆண்டவர் தீயில் -உருவிலா

மெய்ச்சத்தம் கேட்டதுண்டோ கேட்டார் உயிரோடு
மெய்யாய் இருந்ததுண்டோ கேள்மின்னே -மெய்யிலார்

சோதனை மண்ணில் அடையாளம் மாபெரு
சாதனையாய் வேறோர் இனமக்கள் -வேதனை

விட்டு எகிப்தினின் வந்த வகையுண்டோ
நட்டார் இனம்தன் தெரிந்துகொள் -வீட்டிடாதே

கர்த்தர் ஒருவரே நற்றேவன் வேறொருவர்
கர்த்தரல்ல என்றுநீ கண்டங்கு -கர்த்தரே

தேவனென்று உன்மனம் நித்தம் உணரவே
தேவன் அளிக்காட்சி கண்டாயே - தேவனவர்

கற்பிக்க விண்ணின்றும் மண்ணிலே தீநடுவும்
நற்றேவன் பேசுவதை நீகேட்டாய் -நற்றினமே

நுந்தையர் அன்புசெய்த காரணத்தால் நற்றேவன்
அந்தபடி நும்மை தெரிந்துகொண்டு -விந்தையாய்

தம்முகமுன் தம்மிகு வல்லமைக் கொண்டவர்
தம்மினம்மேல் அன்புசெய்து கொண்டுவந்தார் -அம்மக்கள்

வீடெனச் சொல்லிட நும்மை விடபலத்த
நாடவர் தன்னை அழித்திடுவார் -காடோ

உயர்வானம் தாழ்பூமி எங்கிலும் கர்த்தர்
உயர்தவர் ஆதலால் தானே -துயர்நீக்கும்

நற்றேவன் சொல்லும் உயர்நீதி கைக்கொள்வீர்
நற்றேசம் வாழச் சிறந்துநீ -நற்றினம்

ரூபனும் காத்தும் மனாசே அரையினமும்
தாபரித்த கீழ்த்திசையில் மோசேயும் -கோபத்தால்

தீங்குசெய்யா நற்றார்செல் பட்டிணம் ஏற்படுத்தி
தீங்குசெய்தஞ் சம்புக மூன்று

6
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

பத்து கட்டளைகளை தேவன் இசுரேல் இணத்தார் செவிகேட்க சொல்லுதல்

இசுரேல் இனத்தார் அனைவரை மோசே
மிசையில் அழைத்து பகன்றான் -இசுரேல்

இனத்தாரே கேள்மின் இறைக்கட் டளைகள்
தினம்கைக்கொள் வீர்நீர் சிறந்து -இனத்தாரே

ஓரேபில் நம்மோடு தேவன் உடன்படிக்கை
நேரவர் செய்தார் சிறந்தவரும் -சீரவர்

தந்தையர் கைச்செய்யா நம்கையில் செய்தாரே
விந்தையாய் விண்ணார் சிறந்தவரே -விந்தையாய்

தேவன் மலைமேலே தீயினின்றுப் பேசினார்
தேவன் முகமுகமாய் பேசினார் -தேவன்சொல்

எம்மிடம் நீர்தெரி விக்க நடுநில்லும்
எம்மைத்தீ போடும் அழித்திடுமே -அம்மானும்

கட்டளைகள் தந்தாரே பத்து சிறப்பாக
கட்டளைகள் உங்கள் செவிகேட்க -இட்டவர்

ஒன்றையும் கூட்டாது கற்பலகை தன்னிலே
நன்றாகத் தந்தார் இறைவனும் -நின்றநீர்

குன்றதில் குன்றாத தீக்கண்டு உம்மூப்பர்
குன்றாத நம்தேவன் மாட்சிமை -நன்றாக

எம்கண்கள் காணகாட்ட, அன்றியும் போவோமே
அம்மலை தீயில் அழிந்தெனவும் -எம்மானாம்

விண்தேவன் தீயினின்று பேசியதை கேட்டும்யாம்
மண்ணழியா தேயிருந்த நன்வியப்பே -விண்ணார்சொல்

தன்னைத் தொடர்ந்துயாம் கேட்டால் மரிப்போமே
என்றார்கள் மூப்பர் மனந்திறந்து -இன்று

உயிருள்ள தேவன்சொல் தீயினின்று பேச
உயிரோடே யாருமிச் செய்தி -வியச்செய்கை

நீர்கிட்டிச் சேருமின் விண்ணார் இடத்திற்கு
நீர்வந்து சொல்லும்சீர் சொல்தன்னை -சீர்சொல்ல

நீர்சொல்லும் விண்ணார்சொல் யாம்கேட்டுக் கைக்கொள்வோம்
நீர்சொன்ன சொல்கேட்டு கர்த்தரும் -சீர்சொன்னார்

என்றாலும் கட்டளைகள் கைக்கொள்ள நல்லிதயம்
என்றும் இருப்பின் நலமென்றார் -அன்றங்கு

கூடத்திற் செல்மின்நீர் என்றாரே கர்த்தரும்
நாடதில் நன்றாக வாழ்ந்திட -நீடித்து

கட்டளை நன்னியதி யெல்லாம் உனக்குயான்
சட்டமாய் தந்திடுவேன் இன்றென்றார் -திட்டமாய்

தந்திடும் நற்றேசத் தில்வாழ நன்னியதி
தந்தார் வழிவழுவா கைக்கொள்மின் -அந்நியதி

நீரும் இடவலம் சாயாதீர்; செய்தாலே
நீரும் சுகித்து பிழைத்து

7
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

கர்த்தருக்கு கீழ்படிந்து அடையாளங்களாக கையிலும் கண்கள் நடுவிலும் கட்ட விதித்தல்

தேவனாம் கர்த்தருக்கு நீயஞ்சி உன்வழியும்
தேவனுக்குக் கீழ்படிந்து கைக்கொண்டு -தேவன்

உனக்களிக்கும் நாட்டிலே கட்டளைகள் சட்டம்
தினஞ்செய்ய நீதி இவைகள் -இனமே

இசுரேல் இனமே நலமாய்நீ வாழ
திசைதனில் பால்தேன் வழியும் -மிசைநாட்டில்

நன்றாய் வளர தரும்சட்ட திட்டங்கள்
என்றும்நீ கைக்கொள் சிறந்தவை -தன்னே

மனம்பலம் ஆன்மா எனும்மூன்றும் நன்றே
தினம்முழுதாய் அன்புசெய்வீர் தூயர் -தனைநீரும்

இக்கட் டளைகளை உன்வழிதோன் றல்கட்கு
தக்க விதம்போதிப் பாய்நீயும் -மக்களோடு

வீட்டில் அமர்ந்தாலும் புல்வெளியில் சென்றாலும்
வீட்டில் படுத்தாலும் கண்விழித்தும் -காட்டில்

தருமிந்த கட்டளைகள் நீபேசி கைம்மேல்
சிரசிலே கண்நடுவே கட்டு -கரத்தில்

பெறுமிவற்றை வீட்டின் நிலைவாசல் எல்லாம்
இறுமாப்பாய் நீயும் எழுது -சிறந்ததாம்

நன்னாட்டில் கட்டா நகருள் நடாவளங்கள்
தின்றதும் நீர்மறவா தீர்நீதி -என்றென்றும்

தேவனாம் கர்த்தருக்கே ஆரா தனைசெய்வீர்
தேவன் அவர்பேரில் ஆணையிடு -தேவன்

உனைசினங் கொண்டு அழியா திருக்க
வினைசெய்யீர் பொய்யைத் துதித்து -நினைப்பீர்

அழுக்கா றுடையவர் கர்த்தர் பிறரை
வழுவிப்பொய் போற்றாதீர் நீரே -வழுவியும்

முன்னோர்கள் மாசாவில் சோதித் ததைப்போலே
என்றும்நீர் செய்யீர் பிழன்றும்தான் -என்றேனும்

தோன்றல்கள் ஏனிவைச் செய்கின்றீர் என்கேட்டால்
ஆன்றோர் அடிமைகளாய் நாட்டிலே -ஏன்ஏன்ஏன்

என்றலற, கர்த்தர் பலத்த கரங்கொண்டு
இன்றிருக்கும் சேர்த்தார் இடமிதில் -மேன்மக்கள்

தந்தையர்க்கு ஆணை யிடுத்த நலநாடு
விந்தையாய் கையளித்தார் நற்றேவன் -அந்நாட்டில்

நின்று நிலைத்திட அஞ்சிநாம் கைக்கொள்வோம்
என்றுசொல் நீதி யதே

8
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இறைவன் தரும்நல் பிழைத்துப் பெருக
இறைநேமம் கற்பனைகள் கைக்கொள் -இறைவன்

சிறுமைப் படுத்தி நடத்திய எல்லா
பெறுவழிகள் தன்னை நினைப்பாய் -குறைவில்

அறியாத மன்னாவால் ஊண்தந்தார் கர்த்தர்
அறியீர் இனத்தாரோ விந்தை -யறியாரே

தந்தையர் விண்ணூண் தனையுலகில் விண்ணின்று
விந்தையாய் பெய்ததே ஊணுணக்கு -விந்தைப்

பெறுநற் றிருதேசம் வாழேழு மக்கள்
அறுநெற் பதர்ப்போலத் தூற்றி -வெறுஞ்சிலை

பீடந் தகர்த்து சிறிதாய்த் துரத்திடு
நாடதில் வாழ்வோர் விலக்கிடு -நாடதில்

ஏத்தெமொரி பெர்சி கிருகாசி கானானி
தீத்தார் எபூசியும் ஏவியென் -தீத்தேழு

மக்கள்வாழ் தேசத்தை கர்த்தர் உனக்களிக்க
மக்கள்செய் தீய தவிர்த்திடு -மக்கள்

பலமிகு மக்கள் இனத்தார் சிறியோர்
பலமிலை என்றே மனதில் -அலைந்தால்

பலமிகு தேசம் எகிப்திலே கர்த்தர்
பலச்செய்கை நீகொள் நினைவு -பலரோ

மலைதலையாய் ஆறுகள் ஊற்றுகள் கொண்ட
நலகாணி தன்னிலே பள்ளம் -சிலதலை

ஆற்றிற்கு அத்தியொடு நல்மரங்கள் பற்பல
நாற்றந்தேன் தேசமது காண்பாய்நீ -தேற்றி

வயிறார உண்டபின் போற்றுவாய் கர்த்தர்
நியமங்கள் கற்பித்தேன் இன்று -நயமாக

எச்சரிக்கை கைக்கொள்ள கொள்வாய்நீ கட்டிய
மச்சுவீடு தன்னில்வாழ் போதுத்தான் -மிச்சப்

புவிதனில் பேர்மக்கள் என்றோ தெரிந்தார்
புவிசெய் திருக்கர்த்தர் உன்னை -புவியில்

சிறுமக்கள் என்றாலும் தம்தூ யினமாய்ச்
சிறியோரை கர்த்தர் தெரிந்து -அறிவிக்கும்

கற்பனை நேமங்கள் அஞ்சிநீ கைக்கொள்ள
கற்பிக்கின் றேன்இன்று இங்கேநான் -கற்பனைகள்

சொற்கள் மறவாதே மக்களே எச்சரிக்கை
தக்கமேன் மையில்நீ தாழ்த்திடு -தக்கதாகப்

பின்னாளில் நன்மை பயக்கவே அந்நாளில்
தன்மக்கள் சோதித்தார் நற்கர்த்தர் -வன்தீய

தீப்பாம்பு தேள்பல காத்தவர் பாலையில்
மேப்பாறை நீர்வரச் செய்தாரே -தீப்பிழை

பெண்கொடீர் பெண்கொள்ளீர் அவ்வேழு மக்களிடம்
பெண்கொண்டு பெண்கொடுத்தால் விட்விலகப் -பெண்டிர்

வெறுஞ்சிலைகள் போற்றிடச் செய்திடுவர் தீதே
வெறுத்தே அழித்திடுவீர் வேரும் -வெறுக்கும்

வெறுஞ்சிலைகள் தன்னைநீ பின்பற்றிப் போனால்
நறுதேவன் உன்னை அழிப்பார் -சிறுவன்நன்

சான்றாகச் சொல்கிறேன் இன்று எனவங்கு
மேன்மாந்தன் மோசே உரைத்து

9
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இந்நியதி தன்னைநீ கைக்கொண்டால் நற்றேவன்
தந்தையர்க்கு கையளித்த ஆணையாம் -தந்திடுவேன்

நற்றேசம் என்றயித் தேசத்தில் ஆண்பெண்ணில்
சற்றும் மலடிலாது வாழ்வீரே -மற்றும்

அடிமை எகிப்தில்நீ கண்டத்தீ நோய்கள்
கொடிதே அவைகள் பகைக்கு -அடச்செய்வார்

பேரன்பு கொண்டே உனைமீட்டார் கர்த்தரவர்
பேரேழு மக்களை நீக்கிடு -சீராக

இந்நியதி தன்னைநீ கேட்டுக்கைக் கொண்டிட
தந்தையர்க்கு வாக்களித்த நல்லிரக்கம் -தந்திடும்

நற்றேசத் தில்நும்மை எல்லோரைக் காட்டிலும்
நற்பேறு பெற்றிடுவாய் நீயங்கு -சற்றும்நீ

அவ்வேழு மக்களின் பேய்ச்சிலைகள் போற்றாதே
அவ்வாறு செய்வது கண்ணியே -அவ்வேழோர்

மேன்மக்கள் என்றே மனதலைந்தால் பார்வோனும்
கோன்மக்கள் வீழ்ச்சி நினைந்திடு -மேன்மக்கள்

அஞ்சாதீர் எம்மக்காள் மேம்போக்காய் மற்றபடி
அஞ்சும் இனங்கள் எகிப்தைப்போல் -பஞ்சில்தீப்

போலழிவர் ஓடி ஒளிந்திடும் சிற்றாரை
சோலைக் குளவி அழித்திடும் -சீலோர்

உடன்படிக்கை செய்யாதீர் அவ்வே ழினத்தில்
திடனில் சிலைகளை தீயில் -சுடெரி

கடையோர் எனினும் எமக்குத்தூய் நற்றே
உடன்படிக்கை மீறா யிறைவன் -கடையோர்

நிறையன்பு கூர்ந்து நியமங்கள் கைக்கொள்
இறைவனார் ஆயிரம் தோன்றல் -நிறைகாத்து

தம்மேல் பகைசெய்வோர் தம்மை அழிப்பவர்
நம்மிறை என்றுணர் வாய்நீயே -தம்மே

வகைவகை நெல்லும் வகைவகை நெய்யும்
வகையாய் கனியும் வளமாய் -வகைவகை

ஆவினம் ஆட்டினம் நேமங்கள் கைக்கொள்ள
தேவன் அருள்வார் சிறந்தவர் -தேவன்செய்

கண்கண்ட மேற்செயல்கள் எல்லாம் உணர்ந்திரு
கண்காண் இனத்தார் அனைவரை -கண்காணா

நல்லிறை கொஞ்சங்கொஞ் சம்மாய் விரட்டிட
அல்லா தழிக்காதீர் சேர்த்துநீர் -வல்லார்

ஒருமிக்க மக்களை சேர்த்தழித்தால் அங்கு
விரைவாய் வனவிலங்கு மண்டும் -திருவின்சொல்

கேட்டு விரட்டிடு கொஞ்சம்கொஞ் சம்மாக
கோட்டெல்லை விட்டுக் கலங்குவர் -நாட்டதின்

ஏழினத்தின் தீயரசர் கைக்கொடுப்பார் தேவனவர்
ஏழும் அழித்துநீ தீருமட்டும் -ஏழில்

எவரும் எதிர்த்திடார் உன்னை கலங்கி
எவரோ யிவரென்று அஞ்சு -அவரின்

சிலைகள் அணிந்த அணிகலன்கள் எல்லாம்
இலைசீர்ப் பொருளது தானே -சிலையணி

பொன்னும் அணிவெள்ளி யும்தீ அருவருப்பே
நன்றேசீ யென்று விடுத்திடு -நன்றே

சிறுமைப் படுத்தி இறையுன்னை சோதித்
தறிந்தார் மனதுனதை கைக்கொள் -அறிவாயோ

அன்றோ எனநாற் பதுஆண்டு பாலையில்
நன்றாய் அவரும் நடத்தினார் -அன்றோ

சிறுமைப் படுத்தி பசியால் சிறுத்து
சிறப்பாய் உணர்த்த இறைசொல் -சிறப்பால்

நிறைவாழ்வு பெற்றிடுவான் ஊண்மட்டும் இல்லை
குறைவில்லா சொல்லே நலமாம் -சிறைவிட்டு

பாலையில் நீநடந்த நாற்பது ஆண்டுகள்
ஆலையில் நெய்தாயோ ஆடைதனை -பாலை

நடந்தும் கழல்வீங்கா சென்ற வியப்பு
நடைப்பயணம் நல்ல படிப்பு -கொடையாகக்

கற்பிக்கும் தந்தைபோல் கற்பித்தார் நற்றேவன்
கற்பனைகள் கைக்கொள்வாய் என்றென்றும் -நற்றது

காணி மலைகளும் ஆறுகளும் பல்வளமும்
காணதில் இல்லை குறைவேதும் -காணியில்

நெல்லொடு நற்கோ துமையோடு நெய்க்காக
நல்லொலிவம் மாதுளம் குன்றிலே -நல்ல

கணிமங்கள் சீர்நிறை நாடது கேளாய்
அணிசேர் இனமே சிறப்பு -கணிம

வளமிக்க நாட்டில் வயிறார உண்டு
வளம்பல பொன்வெள்ளி சேர்த்து -வளங்களால்

மேட்டிமை கொள்ளாதே என்கையால் ஆனதென
நாட்டுள் உரைக்கா திருந்திடு -நாட்டுள்சேர்

தந்தையர்க்கு இட்ட உடன்படிக்கை மீறாமல்
இந்நாளில் கைப்பெலனை தந்தாரே -விந்தை

இறையோனை விட்டுநீ வீண்சிலைகள் பின்னே
குறைச்சென்றால் போவீர் அழிந்து

10
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இசுரேல் இனமேகேள் யோர்தானைத் தாண்டி
திசைமேற்கு நாட்டிற்குப் போவாய் -மிசைநாட்டில்

விண்ணுயர மேன்மதில்கள் வீழ்த்துவாய் மாமக்கள்
மண்விட்டு நீயும் விரட்டிடு -மண்ணிலே

மாமக்கள் ஏனாக் மனிதர்முன் நிற்பார்யார்
தீமக்கள் மேன்பலத்தின் சொல்லறிவாய் -மேமான்

இறைவன் அவரே இனமுன்னே செல்வார்
இறையழிப்பார் தேவன் விரைந்து -இறைவனார்

தேவன் குறையோர் துரத்த மனதிலே
மேவியென் நீதியால் ஆனதெனக் -கூவி

சிலிர்க்காதே நாட்டார் குறைநீதி யாலே
அலைய விடுத்தார் இனத்தை -இலாதவரை

நாட்டார் குறைநிமித்தம் தேவன் விரட்டுகிறார்
கேட்டின் இனங்களை நீயறி -வீட்டாரே

நம்தந்தை முன்னோர்க்கு செய்த உடன்படிக்கை
தம்மை விடாரதனால் தந்தாரே -எம்மக்கள்

நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்களினம்
நீங்கள் எகிப்தினின்று வந்தநாள் -தாங்காது

பேசிய சொற்களால் தேவன் அழித்திடுவேன்
பேசியோரை ஓரேபில் அன்றுத்தான் -மாசிலா

நாற்பது நாட்கள் புசியாது நீரருந்தா
நூற்றேன் திருநோன்பு குன்றதில் -மேற்றவர்

கைவிரலால் தானே எழுதிய கற்பலகை
தேவன் மலைமேலே தந்ததும் -தேவனில்லா

வார்ப்பித்த கன்றை மலையடியில் தீச்செய்ய
நேர்விட்டு உன்மக்கள் வீண்சிலையை -வேர்வெட்டு

என்றவரை கர்த்தாவே மன்னியும் என்றுசொல்லி
மன்றாட்டு ஏறெடுத்தேன் நான்

11
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
உடன்படிக்கை கற்பலகை தன்னில் எழுத்து
உடன்படிக்கை உங்களிடம் செய்து -திடன்சொற்கள்

தானே அளித்தாரே நீரோ அதைவிட்டு
ஈனராய்ச் சென்றீர் விரைந்துநீரே -நான்பெற்ற

கற்பலகை கையிலேந்தி கீழ்வந்து கன்றுகண்டு
கற்பலகை கைஓங்கி கீழுடைத்து -அற்றச்

சிலையைப் பொடிப்பொடியாய் போக்கி சிலைப்பொன்
மலையாற்றில் நானும் கலந்து -மலையிலே

மன்றாட்டு செய்யநான் நோற்றேன் திருநோன்பு
மன்றாடி தேவா எகிப்தியர் -அன்றோ

பரிதாபம் நாட்டாரை பாலை அழித்தார்
பரிதாபம் என்றுரைப்பர் கீழாய் -தெரிந்தவன்

ஆரோன் குறைமகன் செய்த குறைக்காக
ஆரோனை நீங்கழிப்பேன் என்றதும் -ஆரோன்

திருமகனுக் காக அடியேன்மன் றாட
திருவிடுத்தார் அன்று சினத்தை -செருக்காய்

பலமுறை செய்தீர் எதிராய் கலகம்
பலமுறை சொல்லெதிர்த்து போனீர் -கலக

மனிதர் உமக்காக நாற்பதுநாள் நோன்பில்
முனைந்து புரிந்தேன்மன் றாட்டு -மனிதரின்

ஆண்டவரே, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின்
ஆண்டவரே தந்தையர்க்கு செய்யிரக்கம் -ஆண்டவரே

ஐயா இசுரேல் உமதின் திருவினமே
ஐயா இரங்குவீர் இன்றுநீர் -வையக

ஆண்டவரே, மிப்பெரியக் கைக்கொண்டு கொண்டுவந்தீர்
ஆண்டவரே வாக்குதந்த நல்லிடத்தில் -ஆண்டவரே

உம்மின் இசுரேல் முரட்டைநீர் காணாது
உம்மிரக்கத் தாலிரங்கு வீர்

12
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இறைவனின் கட்டளை வந்ததே மோசே
இறைசொல் பலகைகள் ஈராய் -இறைதந்தார்

மக்கள் குறைவினால் போட்டுடைத்தாய் குன்றடியில்
மக்களுக்கு தந்தநற் சொல்லது -தக்கதாய்

நான்தந்த கற்பலகை போலே எடுத்துவா
நான்தந்த சொற்களை மீண்டுமாய் -நான்தருவேன்

என்றார் இறைவனார்; சேர்த்தே மரப்பெட்டி
ஒன்றும்செய் என்றார் இறைவனும் -நன்றென

சொல்படி நான்செய்து குன்றின்மேல் ஏறினேன்
சொல்தந்தார் விண்ணவர் முன்போலே -சொல்வந்த

நல்வகை தீநடுவில் உம்மோடு பேசியதே
வல்லவர் தந்தார் இறைச்சொல்லை -வல்லவர்

தந்ததை குன்றில் இருந்து எடுத்துவந்து
அந்தப் பலகைகள் தன்னைநான் -இந்த

மரப்பெட்டி தன்னில் இடுவித்தேன் சித்தீம்
மரப்பெட்டி தானே யது

13
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இனத்தார் பயணித்து மோசேரா வந்தால்
இனத்தின் முதல்குரு ஆரோன் -இனத்தான்

மரணிக்க ஆங்கே எலியேசர் ஆனான்
குருவாக கர்த்தரின் முன்நில் -திருமுன்

இனத்தார் பயணித்து குத்கோதா சென்று
இனத்தார் பயணித்து யோத்பாத் -இனமடைந்த

அக்காலத் தில்தானே லேவி குலத்தாரை
எக்காலம் தேர்ந்தார் இறைவனார் -தக்கவர்

லேவி குலத்தாரை தேர்ந்தார் இறைவனார்
லேவி உடன்படிக்கை பெட்டியை -மேவிச்

சுமக்க இறைமுன்னே நின்று துதிக்க
உமைவாழ்த்த தேர்ந்தார் இறைவன் -சுமந்து

இறைமுன்னே போற்றும் சிறப்போடு யானே
குறையில்லா சொந்தம் குலமே -நிறையார்க்கு

செல்தேசம் தன்னில் இலைகாணி என்றென்றும்
நல்லவர் கர்த்தரே காண்

14
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
முன்போல நாற்பதுநாள் குன்றின்மேல் மன்றாட
என்மன்றாட் டையவர் கேட்டங்கு -உன்னை

அழிக்காமல் விட்டார் இறைவனார் பின்னும்
வழிசெல்வாய் முன்னே உரைத்து -செழித்திட

கர்த்தருக்கு அஞ்சி அவர்சொல் வழிநட
கர்த்தர் எதையேனும் கேட்டாரோ -கர்த்தரை

சேவித்து போற்றி முழுதாய் மனதில்
முழுகற் பனைபடி நிற்பாய்நீ -ஏழாமே

வானாதி வானங்கள் யாவும் இறைசொத்தே
வானங்கீழ் பூமி அவர்சொத்தே -ஏனையர்

விட்டு உமதின் திருமுன்னோர் அன்புசெய்து
வெட்டிப் பிரித்தார் இனமுந்தன் -நட்டார்

சிறப்பினம் நீரென் பதால்தான் பிடரி
இறுமாப்பாய் நிற்காதீர் மக்காள் -சிறப்பினமே

நல்மனதின் முன்தோலை நீக்கி இறைவனையே
செல்லிடத்தில் போற்றிடு வாய்என்றும் -சொல்லவரே

தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும்
தேவன் திருக்கர்த்தர் தான்கேளாய் -யாவே

அவரே மகத்துவமும் வல்லமையும் அஞ்ச
இவரே ஒருவர் அறிந்து -அவரோ

செயற்காக கையூட்டு வாங்காத தேவன்
செயலில் நடுநிலை காத்து -வியனவர்

திக்கற்ற பிள்ளைக்கும் கைம்பெண் அனைவர்க்கும்
தக்கதாய் காப்பார் அறிவாய்நீ -மக்களே

அன்புவைத்து அந்நியன்மேல் ஊண்உடுக்கை தந்திடும்
அன்பான தேவனவர் எஞ்ஞான்றும் -அன்புவை

அந்நியன்மேல் அந்நியராய் கீழ்நாட்டில் நீஇருந்த
அந்நாட்கள் தன்னைமற வாதுநீ -எந்நேரம்

உன்தேவ னாகிய கர்த்தருக்கு நீயஞ்சி
நன்றாகச் சேவித் தவர்பற்றி -முன்பங்கு

உன்கண்கள் கண்ட பெரியநற் செய்கைகள்
உன்னிடம் செய்த திருத்தேவன் -முன்னோர்

எழுபது பேராய் எகிப்துக்குப் போனார்;
செழிவிண்மீன் போலத் திரும்பு -அழியா

அவர்பேரில் ஆணையிடு; உன்புகழ் என்றும்
அவரென மோசே உரைத்து

15
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
உன்தேவன் கர்த்தரின் கட்டளைகள் தன்னைநீ
என்றென்றும் கைக்கொள்வாய் கற்பனைகள் -நன்றே

நியாயங்கள் நற்பிரமா ணங்கள் அவரின்
நியமங்கள் தன்னைக்கைக் கொள்வீர் -கயவன்

எகிப்தின் அரசனாம் பார்வோன் உடனும்
எகிப்தின் இனமக்கள் எல்லாம் -வகைசெய்த

கைச்செயல்கள் மற்றும் அடையாளங் கள்படைமேல்
தீச்செங் கடல்புரண்ட காரியம் -மேச்செயலே

இவ்விடம் வந்துசேர பாலையில் செய்தவை
அவ்வகை தீயோர் எதிர்பேச -எவ்வகை

பூமி விழுங்கியதை கண்ட இனத்தாரே
பூமியில் சொல்கேட்கின் றீர்நீர்தான் -பூமியில்

கண்கண்ட உங்களிடம் பேசுகின்றேன் அல்லவா
கண்காணா பிள்ளை களிடம்நான் -மண்ணிலே

பேசாமல்; நீங்கள் பலப்படவும் வாக்குசெய்த
தேசத்துள் நீடிக்கக் கேள்இனமே -பேசியே

இன்றுநான் உங்களுக்குக் கற்பிக்கும் கற்பனைகள்
நன்றே அதையெல்லாம் கைக்கொள்வீர். -நன்பாலும்

செந்தேனும் ஓடும்நல் நாடே எகிப்தைப்போல்
அந்நாடு இல்லை யறிந்திடு -செந்நாட்டில்

கீரைத்தோட் டத்தில் விதையை விதைத்துநீ
நீரையுன் காலாலே பாய்ச்சினாய் -சீரவர்

சொல்நா டதிலோ மலைப்பள்ளம் உள்ளநாடு
வல்விண் மழையருந்தும் நாடது -வல்லாராம்

தேவன் திருக்காக்கும் நாடது ஆண்டுதனில்
மேவி துவக்கங் கடைவரை -தேவனாம்

கர்த்தரின் கண்கள் அதின்மேலே வைத்திருப்பார்
கர்த்தரின் கட்டளைக்கைக் கொள்வீரே -கர்த்தர்

முழுமனதும் சீரோடும் அன்புகூர்ந்து சேவி
முழுகற் பனைகளை எல்லாம் -வழுவா

நடந்தாலே நெல்லோடு நெய்சாறு நன்றாய்
நடவுசெய்ய விண்ணீர் விழுமே -இடமாமத்

தேசத்தில் முன்மாரி பின்மாரி பெய்ச்செய்து,
தேச விலங்குகட் காகப்புல் -வீசையாய்

தேசத்தில் தானே வளர்ந்திடச் செய்வாரே
தேசம்சேர் மக்களே கேளீரோ -பேச

மனதைநீர் வஞ்சனைக்கு உட்படாமல் வீணாய்
இனவிறை விட்டுப்போ னாலே -இனவிறை

வெஞ்சினம் தன்னிற்கு ஆளாகி விண்மழை
வெஞ்சினத்தால் பொய்க்கும் அறிவீர்நீர் -வெஞ்செய்

மழையில்லா காரணத்தால் தன்பலன் பொய்க்க
மழைதரும் வானம் அடைப்பார்; -மழையிலாது

நற்றேசத் தில்லிருந்து நீங்கள் அழிந்திடுவீர்
கற்பனைகள் கைக்கொள்ளா தீச்செய்கை -நற்றாரே

தேசத்தில் நாட்கள் வழிநாட்கள் நன்மிகவே
ஈசனின் சொற்கள் மனம்பதித்து -தேசவாழ்

மக்களே கண்கள் நடுவே நினைவுகுறி
தக்கதாய் கைம்மேல் பதித்திடுவீர் -தக்கதாய்

போதியும் பிள்ளைகட்கு வீட்டில் வழிசெல்லும்
பாதைகளில் தூங்கும் இரவிலும் -வேதம்

தனைக்குறித்து நீபேசு; வீட்டின் நிலைமேல்
நனிவாசல் தன்னில் எழுது -இனியாரே

தேவனாம் கர்த்தரிடம் அன்புகூர்ந்து கட்டளைகள்
யாவே அருள்வழி தன்னிலே -மேவி

வழிநடந்தால் நாட்டில் இனங்கள் துரத்தி
வழிசெய்வார் பேரை அழிக்க -வழிசெல்லும்

நாடாகும் கால்மிதி எவ்விடமும்; கீழ்திசை
நாடெல்லை ஐபிராத்து மேற்றிசை -நாடெல்லை

மேற்கடலும் தெற்கிலே பாலை வடதிசை
நற்றெல்லை லீபனோன் கேளினமே -நற்றார்முன்

மற்றார் எதிர்நிற்கா வண்ணம் புரிவாரே
சற்றே பெயர்கேட்டால் அஞ்சுவர் -சுற்றம்

மிதிநில மெல்லாம்காண் அஞ்சி நடுங்க
விதிசெய்வார் கர்த்தர் திருவும் -விதியது

வாழ்த்து கெடுசொல் இரண்டும்முன் வைக்கிறேன்
வாழ்த்துகள் கீழ்படிந்தால் வந்திடும் -வாழ்நாளில்

கீழ்படிய மாட்டோம் எனநீங்கள் வீண்சிலைகள்
வாழ்த்த வரும்வல்சொல் கேடுந்தான் -கீழ்விட்டு

வாழ்செலும் நாட்டில் கெரிசீம் மலைமேலே
வாழ்த்தும் மலையேபால் மேல்நீர்சொல் -தாழ்ச்சொல்லே

கில்கால் எதிரே நதியோர்தான் மேற்கரையில்
நல்மோரே குன்றுகள் காண்

16
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
உட்புகும் தேசத்தின் ஆரா தனைமுறை
கெட்டவை ஆதலால் முற்றிலும் -கெட்டவை

நாட்டில் இராதபடி நீங்கள் அழித்திடுவீர்
நாட்டார் திருச்சொல் படியங்கு -தீட்டே

பெயர்முதலாய் இல்லாது பேய்ச்சிலைகள் தன்னை
வியக்கா தழித்திடுவீர் தோப்பு -இயற்கையென

விட்டிடாது மக்காள் அழித்திடுவீர் எல்லாமே
கெட்டவை ஆதலால் தீதவை -கெட்டவர்

மற்றார் செயல்போல நீங்கள் செயலாகா
சுற்றா ருடன்தே வனைசேவி -நற்றார்

இருக்கும் நலக்கூடா ரம்வரை வந்து
திருவின் பலிகள் செலுத்தி -திருசொல்லும்

நற்றிடம் தன்னில் குடும்பத் தினரோடு
நற்றார்முன் வந்து புசித்துநீர் -நற்றார்

திருவீட்டில் நன்றாய் மகிழ்ந்திடுவீர் ஆங்கே
திருப்பலிகள் தன்னை கொடுத்து -திருதரும்

நாட்டிலே கைப்பலன் நன்றாக வந்ததால்
வீட்டைவிட்டு கூடாரம் நிற்குமிடம் -வீட்டார்

அனைவரோடும் வந்து தலையீற்று தன்னை
நினைவாகத் தந்திடுவீர் நீரும் -வனமாமே

பாலைதனில் கண்போன போக்கில் நடந்ததுபோல்
பாலைவிட்டு சேரும் நலநாட்டில் -பாலைசெய்

போல இனத்தாரே செய்யா திரும்நாட்டில்
மேலாம் திருநாடு சீர்தானே -மேலார்

இறையோன் வழிபட ஓரிடம் நாட்டில்
இறையோன் தருனில மாங்கே -இறைவனுக்கு

செய்திடும் நற்பலி எல்லாமே அங்கேதான்
செய்திடக் கொண்டுவரு வீர்நீர்தான் -மெய்யாய்ப்

பெயர்விளங்க தேவன் குறித்த இடத்தில்
பெயர்சேவி மக்களே நன்று -பெயர்க்காகக்

கூடவேறே வெற்றிடம் போகாதீர் எச்சரிக்கை
கூடம் இருமிடம் செல்வீர்நீர் -நாடில்

உணவிற்காய் வீட்டின்முன் வாசலில் நீயும்
உணவாய் விலங்கை யடித்து -நிணத்தைப்

புசித்திடலாம் மான்களைப் போல; குருதி
புசிக்காதீர் நீரைப்போல் ஊற்று

17
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
நெல்லும் கனிச்சாறும் பத்தி லொருபங்கும்
நல்லீற்றின் முன்னீற் றெலாம்நீவிர் -நல்லெண்ணெய்

காணிக்கை வீட்டில் புசிக்காது நற்றிடம்
காணிக்கை கொண்டுசெல் வீர்நீர்தான் -காணத்

தெரிந்துகொள் நற்றிடத்தில் செல்வசெல்வி வேலை
கரைதனில் வாழ்லேவி எல்லாம் -விருந்துண்டு

உன்தேவ சந்நிதியில் நன்றாய் மகிழ்ந்திடு
உன்தேவன் சொல்லிது கேள்மின்னே -உன்கைதரும்

தேசத்தில் வாழ்நாளெல் லாம்லேவி கைவிடாதே
தேசத்தின் எல்கை விரிவாக்க -ஈசன்சோல்

போலங்கு நல்லிறைச்சி வாயிற்கு வேண்டுமெனில்
சீலோர் புசிக்கலாம் ஊன்தனை -மூலைநில்

தீட்டுப் படயெவனும் தீட்டுப் படாதவனும்
வீட்டிலே ஊன்புசிக்க இல்லைதடை. -நாட்டில்

குருதி பருகாதீர் என்றென்றும் நேமம்
குருதிதனில் உள்ள துயிர்தான் -விரயக்

குருதி பருகாது நீர்போல ஊற்று
குருதிதனில் உள்ள துயிரே -கரையெங்கும்

நன்றா யிருக்க அதைச்சாப் பிடலாகா
என்றென்றும் நேமம் இதுதானே -நன்றாகத்

தீபலி மற்றபலி எல்லாம் செலுத்திட்டு
தீபலி போல குருதியை -தீபீடம்

மேலூற்றி மற்றபலி ஊனதனை திண்ணவே
சீலார்முன் தந்திட லாமங்கு -சீலாரில்

மற்றவர் ஆரா தனைசெய்பேய் சேவிக்கக்
கற்பேன் எனவும் விசாரிக்க -முற்படாதே

எச்சரிக்கை யாயிரு. கர்த்தர் வெறுக்கிற
அச்செய் அருவருப் பேகேளீர் -கொச்சையாய்

தம்மக்கள் தன்னையே பேய்களுக்கு தீப்பலி
அம்மக்கள் ஈந்தனர் என்பதால் -அம்மக்கள்

செய்கைகள் கர்த்தர் வெறுக்கிறார் ஆதலால்
செய்யாதீர் தீச்செய்கை கள்தன்னை -செய்ச்சொல்லும்

இன்றுனக்கு நான்விதிக்கும் யாவையும் செய்திட
நன்றாய் கவனம்கொள் நீயதில் -ஒன்றும்

நலங்கூட்ட வும்வேண்டாம், ஒன்றும் குறைத்து
விலக்கவும் வேண்டாம் சிறப்பு

18
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
வாக்குரைப்போன் என்றும் கணவுகண்டேன் என்றுமங்கு
வாக்கவர் விட்டு விலகிட -வாக்குரைக்கும்

தீயவர்சொல் நாட்டில் நிறைவேறி னாலுமங்கே
தீயர்ச்சொல் கேளா திரும்நீர்தான் -தீச்சிலை

மற்றப்பேய் தேவனென உன்னை தடம்மாற
வெற்றுச் சிலைகள் பணியவைக்க -சுற்றார்

உனையேவ செல்லாதீர் அச்சிலை பின்நீர்
உனைசோ தனைசெய் கிறாரே -உனையங்கு

இவ்வகை விட்டு விலகச்செய் மாந்தரை
இவ்வகை செய்கைக்காய் கொன்றுபோடு -அவ்வகை

செல்வரோ நண்பனோ இல்லாளோ தீச்செய்ய
செல்லென்கை உன்கொல் முதலாக -அல்லார்

இரக்கம் கனிவுகாட்டா மக்கள் ஒளியா
திருப்பீர் இறைவிட்டு போயேன் -விரயமாய்

சொல்பேசும் யாரெனினும் கொல்வீர் விரைந்துநீர்
சொல்லவர் தானே இறைவனார் -சொல்கேட்டுக்

கல்லெறிந்து கொல்வீர்நீர் தீச்சொல் உரைத்தோரை
கல்லெறிந்து கொல்வதை கண்டவர் -அல்லாது

செல்லார் வழிதிரிந்து; மற்றார் வழிதிரியச்
சொல்கேட்டு வெட்டிடு வீர்நீர்தான் -சொல்லிடும்

மற்றார்வாழ் பட்டணம் வாழ்குடி பட்டயத்தால்
அற்றதாய் வெட்டி, அதிலுள்ள -அற்றையும்

வாளாலே வெட்டி அதில்கொள்ளை யிட்டதை
மாளாச் சுடுதீ யெரித்திடு -கேளீர்

கெடுபொரு ளேதும் இருக்கவேண்டாம் கையில்
கெடுவிட்டு கர்த்தரின் நேமம் -விடாதுநீ

நல்லவர் கண்காணச் செம்மையாய் கைக்கொள்ள
நல்லவர் வாழ்த்துவார்நல் வாழ்த்து

19
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தேவனாம் கர்த்தரின் பிள்ளைகள் நீங்கள்தான்
தேவையின்றி செத்த மனிதருக்காய் -கேவலமாய்

கீறிக்கொள் ளாமலும், உங்களின் கண்களிடை
மீறி மயிரெடுக்கா தீர்நீர்தான் -மீறாதீர்

தூயர் இனமே இறையின மக்களே
தூயர் எடுத்தார் இனமெலாம் -தூயரும்

தேடித் தெரிந்து; வெறுக்கும் விலங்குகள்
நாடிப் புசியா திருப்பீரே -நாடிப்

புசிக்கவே ஆவினம் மேவினம் மானும்
புசிக்க விரிகுளம் புள்ள -அசையிடு

எல்லா விலங்குகள் நன்றே விரிகுளம்
பில்லா அசையிடா விட்டுவிடும் -அல்லா

விலங்கு களில்வகை ஒட்டகம் போன்ற
விலங்குகள் வாயில் அசைத்தும் -இலையே

விரிகுளம் பங்கு வெறுத்து விடுவீர்
சரியிலா தவ்வகை தீதே -சரியில்

விலங்கு களில்வகை பன்றிகள் போன்ற
விலங்கு விரிக்குளம் பேயென் -இலையே

அசையிலா காரணம் விட்டு வெறுப்பீர்
அசையிலா மாக்கள் வெறுத்து -மிசைதனில்

நீர்வாழும் எல்லாவற் றில்செதிள்கள் தானிருக்க
நீர்வாழும் மீன்வகைகள் உண்ணலாம்நீர் -நீர்வாழ்ஊன்

நற்சிறகு இல்லாத நற்செதிள்கள் இல்லாத
மற்றவைகள் விட்டுவிலக் கும்மக்காள் -அற்றில்

பறப்பன வற்றில் புசிக்கலாம் என்றே
பறவை யினத்திலே தந்தார் -சிறப்பாய்

பறப்பன வற்றிலே ஊர்வன விட்டு
பறவை பலபுசி நன்றே -சிறப்பின்றி

தானாய் மரித்த விலங்கோ பறவையோ
ஈனமாய் நீரும் விடுத்திடு -தானமாய்

மாற்றார் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது
மாற்றார் விலைக்குவிற் றுப்போடு -நற்றாராம்

உங்களுடை தேவனாமே கர்த்தருக்கு தூயர்நீர்
பங்கமாக வெள்ளாட்டுக் குட்டிதனை -அங்கேதான்

ஆதாயின் பால்விட்டு நீர்சமையா தீரென்றே
வேதவரும் சொன்னாரே ஆங்குத்தான் -வீதம்

விதைத்த நிலங்கள் வளமாய் பலனாய்
அதில்நீர் திருவவர் பங்கும் -அதுபடி

நற்றலை யீற்றும் எடுத்து திருவவர்
நற்றவர் முன்புசிப் பீர்நீர்தான் -நற்றாய்

வயலில் விளையும் மெலாப்பலன் தன்னில்
நியமமாய் பத்தில் லொருநல் -நியம்பிரி

எண்ணெயும் சாறும் நியம்பிரி பங்கதை
எண்ணி புசித்தேர்ந் திடத்திலே -விண்ணவர்

தேர்ந்திட்ட நல்லிடமோ தூரமென்றால் விற்றுகாசு
தேர்ந்திட்ட நல்லிடம்சேர் வந்தங்கு -தேர்ந்திட்ட

நல்லிடத்தில் நல்விலங்கு வாங்கிபுசி நல்லவராம்
நல்லேவி சுற்றங்கள் சூழ்ந்துண்டு -நல்லவராம்

லேவியர்க்கு உன்னோடே பங்கில்லை என்பதனால்
லேவியரைக் கைவிடீரே. மூன்றாண்டு -மேவகடை

பத்திலொரு பங்கதைநீர் அவ்வாண்டில் வாசலில்நீர்
அத்தவராம் கையெடுக்க விட்டுவிடு -அத்தவராம்

திக்கற்ற பிள்ளைகளும் கைம்பெண்கள் எல்லாரும்
வக்கற்று தேசத்தில் வாழ்மக்கள் -அக்கறையாய்

வாழ்ந்திடவே விட்டுவைப்பீர் மூன்றாமாண் டின்பங்கு
வாழ்த்துவாரே கர்த்தரிறை வன்.

20
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ஏழாந் திருவாண்டு சுற்றார் விடுதலைக்கே
ஏழாந் திருவாண்டில் சோதரர் -கீழாகிப்

பெற்றகடன் எல்லாமே தண்டாமல் விட்டுவிடு
பெற்றகடன் மற்றாரின் தண்டலாம் -அற்றார்

எளியோர் திருவில் இருக்கா முறைக்கே
எளியோர் கடனெலாம் விட்டு -எளியோர்

கடனில் விடுதலை பெற்று நலவாழ்
கடனை விடுவெனச் சொல்ல -கடனை

அடயிதோ ஏழாந் திருவரு கின்ற
நடப்பென கைகளை மூடி -நடவீர்

எளியோர் திருவவர் நோக்கி அழைக்க
தெளித்தவர் பாவம் விழுமே -தெளிவே

எளியோர் இலாதே திருநா டிராதே
எளியோர் சிறுமை விலக்க -தெளிவாய்

அளிப்பீர் திறந்து இனத்தார்; அளிப்பார்
அளிக்க மடைதிறந் தங்கு -எளியோர்

எபிரெய ஆணோ எபிரெய பெண்ணோ
எபிரெயர் உன்னில் விலைப்போய், -எபிரெயர்

ஆறென ஆண்டுகள் வேலைசெய்ப் பின்னராய்
மீறா விடுதலை செய்திடுவீர் -மாறா

விடுதலை நாளில் வெறுங்கை விடாது
விடுதலை சேர்த்து நறுநெல் -விடுத்து

விடுவாய் இரண்டு மடங்கு விலைக்காய்
இடத்தான் புரிந்த தனால்காண் -விடாதுநான்

வேலை புரிகிறேன் நேசம் விடாதுநான்
வேலைசெய் கின்றேன் எனச்சொலின் -வேலையின்

காதை கதவோ டுசேர்த்துத் துளைத்திட
மீதி இருப்பான் விதி

21
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ஆவின மேவினத்தின் ஈன்றெடுக்கும் முன்னெல்லாம்
யாவே இறைவனுக்கு சொந்தம்காண் -மேவிநீர்

செல்நல்ல நாட்டில் தலைமாக்கள் வேலைகொளா
மல்விடும் ஆட்டின் மயிர்தனை -நெல்லொடு

கர்த்தரவர் சொல்லிடத்தில் யீற்றுதலை கொண்டுவந்து
கர்த்தருக்கு நேர்பலியாய் தந்திடுவீர் -கர்த்தருக்கு

நேர்பலி மாக்களில் ஏதும் குறைப்பழுதென்
சீர்ப்பலி இல்லை அறிவீர்நீர் -சேர்ந்து

தலையீற்று மாக்களில் சீர்ப்பலி இல்லை
தலையீற்று மாக்களை வீட்டில் -கலைமானைப்

போல புசித்திடலாம் தீட்டோ இலாதவனோ
சாலப் புசித்திட லாம்நீர்தான் -சாலே

குருதியை உண்ணீர் விடுவீர் தரைமேல்
குருதி குடிப்பது நன்றில் -குருதி

உயிரே அதனால் குடியா தரைமேல்
நியமம் படியே விடு

22
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருமாதம் ஆபிப் வரக்காத் திருப்பாய்
திருமாதம் ஆபிப் தனிலே -திருவும்

எகிப்தில் இருந்துக் கொணர விடுத்தே
எகிப்தின் அடிமைத் தனவில் -எகிப்துவிட்ட

ஏழுநாள் அப்பம் புளிப்பிலா சாப்பிடு
ஏழுநாள் வீட்டில் புளியப்பம் -வீழதைக்

காணா திருக்கட்டும் தீவிரமாய் நீவிரைந்து
காணப் பொழுதில் விடுத்தீரே -காண

முதல்நாளில் நீப்பலி யிட்டமே யின்ஊன்
முதல்நாளே சாப்பிட்டு விட்ட -முதல்நாளின்

ஊனதை காலையில் தீயிலே யிட்டழியும்
ஊனை புசியாதீர் பின்னராய் -வானவர்

தேவனாம் கர்த்தர் தரும்நல நாட்டிலே
தேவன் அளித்தநல் வீட்டிலே -தேவனின்

பாசுகா நீயடிக் காதீர்; திருநல
தேசத் திலேதேர்ந் திடந்தன்னில் -தேசத்

திருவிழாக்கள் மூன்றிக்கு ஆண்மக்கள் எல்லாம்
திருமுன்னே வந்திடுதல் நேமம் -திருமுன்

வெறுங்கை வராது தகுதி பலியை
சிறுத்தேனும் கொண்டு வரச்சொல் -நறுமத்

திருவிழாக்கள் மூன்றது பாசுகா கூட
திருவிழாக்கள் ஏழுவாரம் கூடம் -திருவிழா

நேமத்தை கர்த்தர் அளித்தவர் ஏற்படுத்து
நேமம் திருமக்கள் என்றவர் -நேமங்கள்

நீதியையே பின்பற்றி கையூட்டு வாங்காது
நீதியாய் தீர்க்க திருமக்கள் -வேதவர்

சொன்னாரே நீதியாய் தீர்க்கவே ஏற்படுத்த
முன்முகம் காணாது தீர்ப்புசெய் -வன்னாமே

கையூட்டு ஞானியரின் கண்கள் குருடாக்கி
கையூட்டு நீதிமானின் நீதியை -வேயாது

தாறுமாறாய் போகச் செயல்புரியும் என்பதால்
வேறாய் வெறுப்பீர்கை யூட்டுதனை -வேறாமே

தேவனாம் கர்த்தரின் நற்பீடம் பக்கத்தில்
தேவனாம் கர்த்தர் அருவருக்கும் -தேவனிலா

மக்களின் தோப்போ வெறுஞ்சிலையோ நாட்டாதீர்
மக்களே கர்த்தர் திரு

23
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பழுதிருந்தால் ஆமே எதுவும் தராதீர்
பழுதான மாக்கள் இறைக்கு -வழுவாம்

அதனால் பலியாய் படைக்கா திருப்பீர்
அதுவோ அருவருப்பே கேள்மின் -அதுபோல்

உடன்படிக்கை தன்னை தரும்வீட்டில் மீறி
கடவுளை விட்டு இயற்கை -கடவுளென

போற்றிடும் ஆண்பெண் இருந்தார் எனக்கேட்க
போற்றுதலை நீவிசா ரித்துப்பின் -போற்றுமவ்

மக்கள் செயலது கேட்டபடி என்றாலே
மக்கள் அவர்களை கொன்றிடும் -மக்களை

கொன்றிட சான்றுசொல் மக்கட்கை முன்முதல்
கொன்றிட மக்களின்கை பின்னாகி -என்றும்

இருவரோ மூவரோ சான்றளிக்க வேண்டும்
திருவிட்டு போனதை சான்றாய் -இருமூவர்

சொல்லிட சான்றுசொல் மக்கட்கை முன்முதல்
சொல்லா தவர்கள்கை பின்னாக -சொல்படி

கல்லெறிந்து கொல்லவேண்டும் அம்மக்கள் தன்னைநீர்
கல்லெறிய வாசல் வெளிக்கொண்டு -கல்லெறியும்

சான்று ஒருவரின் மட்டும் கொளாதுநீர்
சான்று இருமூவர் கேட்டுச்செய் -சான்றுகொல்

அப்படியே தீமையை தேசத் தினின்றுநீர்
எப்போதும் வன்விலக்கும் மக்களே -அப்படியே

உங்களுள் ஏதும் வழக்கிருந்தால் போவீர்சீர்
உங்களுள் பேர்நீதி மான்உளரே -அங்கே

நியாயந்தீர் செய்கை உனக்கு அரிதாய்
நியாயத்திற் காக எழுந்து, -நியாயவர்

தேவனாம் கர்த்தர் தெரிந்த இடம்போய்நீர்,
லேவிய ஆசரியர் கேள்மின்னே -தேவனின்

லேவிய ஆசரியர் இன்ன நியாயமென
தேவன்சொல் என்றுரைக்க அச்சொல்லை -மேவிநீர்

ஏற்று இணங்கி விதிக்கும்செய் கைகளைநீர்
மாற்றாது செய்வீரே நன்றதுவே -ஏற்றதை

மாற்றாது செய்வீரே நற்சொல் தனைநீரும்
மாற்றாது செய்யாத மக்களை - மாற்றிசெய்த

காரணத்தால் தீதேன நீரறிந்து மாற்றியோர்
கோரமாய்கல் சாக எறிந்திடு -காரணம்

கண்ட இனத்தார் இடும்புசெய்யா தேயிருப்பர்
கண்டவர் அஞ்சி இருப்பார்கள் -கண்டுநீ

மாற்றார்க் கரசர் உளரதனால் சோதரர்
ஏற்படுத்து தேவன்சொல் கேட்டங்கு -போற்றும்நல்

சோதரர் விட்டு இனவேறாள் மேனாளாய்
வீதமாய் ஏற்பாடு செய்யாதீர் -சோதர்னென்

றாலும் பலவளம் பெற்றிட என்றும்நீர்
பாலை எகிப்துபோகா தீர்தீதே -வேலையாயும்

பாலை தனைத்தாண்டி கீழ்நாடாம் மேற்காக
வேலை வளங்கொள்ள போகாதீர் -பாலைநாடு

போகவேண்டாம் என்று திருவின்சொல் உள்ளதே
போகா திருமெகிப்து நாடுநோக்கி -வாகாக

ஏற்பட்ட அவ்வரசன் சிம்மா சனத்திலமர்ந்
தேற்றாண் எனவவன் சோதரரை -மாற்றியே

காணுதல் கூடாது; பெண்டிர்கள் பற்பலராய்
வீணாய் மணம்செய் விடுத்திட -வீணாக

பெண்டிர் பலரை மணஞ்செய்தால் விட்விலக
பெண்டிர் வகைசெய்வர் என்பதால் -பெண்பலர்

வேண்டாம் அரசர்க்கு என்றென்றும் வாக்கையவர்
வேண்டியே நிற்க விருப்பமாய் -வேண்டியவன்

இந்நியதி தன்னை எழுதி தனக்காக
இந்நியதி நூல்களை கைவைத்து -இந்நியதி

தன்னை அரசனவன் வாசித்துக் கைக்கொள்ள
நன்றாய் வழியாளு வர்

24
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
லேவியர் ஆசரியர் நேரவர்க்குப் பங்கில்லை
லேவி குலத்தவரை தேர்ந்தாரே -தேவனவர்

தேவனே நற்பங்கு என்றென்றும் நற்பலி
லேவி குலத்தவரின் பங்குகேள் -லேவியர்

தன்மக்கட் கைபெறட்டும் பங்காக மாக்களில்
முன்னந் தொடையொடு தாடைகள் -நன்னிரைப்பை

ஆசரியன் பங்கே அதன்சேர் முதற்பலன்
ஆசரியன் கைப்பங் கறிவாய்நீ -தேசத்தில்

நெல்லோடு நற்சாறு எண்ணெய் மயிரெல்லாம்
நல்லாசன் கைசேர்த் திடச்சொல்லே -நல்லேவி

தன்வீடு விட்டுவந்து தேர்ந்திடத்தில் வாழவர
முன்போல பங்குண்டு ஆங்குத்தான் -சென்றாரும்

முன்னிருக்கும் லேவியர்போல் பங்கடைவர் வந்தலேவி
முன்னின்று ஊழியத்தைச் செய்திடவும் -தன்சொத்து

தந்தையர் சோத்தோடு முன்னவர்போல் பங்குண்டு
எந்நாளும் தேவ விதி

25
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தீமக்கள் போலநீர் செய்யாதீர் தேவனவர்
தீமக்கள் செய்கையால் தானிருக்கும் -தீமக்கள்

வாழ்தேசம் விட்டகற்று கின்றாரே தீதுசெய்கை
கீழ்தானே செய்யாதீர் நீரென்றும் -கீழோரோ

தன்மகனோ தன்மகளோ தீக்கடக்கப் பண்ணுதல்
நன்னாள் குறிபார்த்தல் அஞ்சனம் -வன்னே

வியன்வித்தைக் காரர்கள் மந்திர வாதி,
வயஞ்செத்தோர் கேள்குறி தீது -மயக்கும்செய்

இவ்வகைச் செய்கைகள் தேவன் அருவருக்க
இவ்வகைச் செய்வோரை விட்விரட்டு -அவ்வகை

செய்வ நிமித்தமே உன்தேவன் முன்னின்று
செய்வோர் துரத்துகிறார் சீரவர் -மெய்யிலா

நன்னாள் எதுவெனக் காண்போரை கேட்கின்ற
முன்னாள் இனத்தவர் போலிரீர் -என்னாளும்

கர்த்தர் குறிகேள் விடைதர மாட்டாரே
கர்த்தர்முன் தூயனாய் நில்

26
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தேவன் திருகர்த்தர் என்னைப்போல் வாக்குரைக்க
யாவே இறைவாக்கர் தந்திடுவார் -யாவேசொல்

வாக்குரைக்கும் நல்லவரின் சொல்கேட்டு பின்பற்று
வாக்குரைத்தான் மோசே சிறந்தங்கு -வாக்கவர்

ஓரேபில் கூடிய நாளில் இனம்சொன்னீர்
சீரவர் தீப்பெருந்தீ சாகாது -நேரே

இனிகாணா கேளாத வண்ணம் இறையோன்
நனிசெய்யக் கேட்டீர் இனமே -மனிதா

சரிசொல்லே மக்கள்சொல் என்றங்கு சொன்னார்
திருவாக்கு சொல்லிட என்போல் -தருவேன்

எனச்சொன்னார்; வாக்குரைக்கும் நல்லார்சொல் கேட்டு
நனிசொல்வார் கற்ற துனக்கு -நனிபெயர்

என்பெயரால் சொல்லுமவர் சொற்களை கேளாது
வன்செய்வோன் தன்னைநான் தண்டிப்பேன் -என்சொல்

இலாதவை என்சொல் லெனச்சொல்லும் தீயோர்
இலாதே அழித்து விடுங்கள் -இலாதபொய்

மற்ற பெயரால் இறைவாக் கெனவுரைத்தீ
அற்றா தகற்று விரைந்துநீ -நற்றவர்

வாக்கை அறிவது எப்படியோ வாக்குரை
வாக்கு நடந்தேறா போழ்துத்தான் -வாக்குரை

அவ்வகைத் தீயோர் துணிகரச் சொல்லாமே
அவ்வகைச் சொன்னவன் அஞ்சாது -அவ்வகைத்

தீயோர் அழித்திடு வாக்கு நடந்தேறா
தீய உரையென் பதால்

27
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
வேரறுத்து கர்த்தர் தரும்தேசத் தில்பிசகாய்
சீராண் ஒருவன் கொலைசெய்ய -சீராண்

ஒளிந்திட கட்டு நகரங்கள் மூன்று
ஒளிய விரையவே ஆங்கு -ஒளிநகர்

மூன்றாய் நிலத்தைநீ பங்கிட்டு ஓடுநகர்
மூன்றை விரைந்தோடக் கட்டுவாய் -மூன்றில்

பகைகண்கள் விட்டு விரைதூரம் மட்டும்
பகைவன் வராத நகரம் -வகையாக

இன்றுனக்கு சொல்லும்நல் கற்பனைகள் எல்லாமே
என்றென்றும் நீகைக் கொளவுமிறை -நன்றென

எல்லைகள் பேராக்க மீண்டும் ஒளியகட்டு
எல்லை நகரங்கள் மூன்றுநகர் -அல்லாமல்

முன்பகை காரணத்தால் கொன்றால் நகரொளிந்த
வன்னாரை மூப்பர் கொணர்ந்துவந்து -முன்பகை

தானே கொலைக்கென சான்றறிந்து கொன்றோனை
தானே கொலைசெய்வீர் ஆங்குத்தான் -ஈனர்

இரங்காதே அம்மக்கள் வன்செய்கை செய்தார்
மரண விதியது மாறா -விரைந்துசெய்

தீதை அகற்றிடுவீர் தேசத்தில் அப்படியே
வேதன் உரைத்தார் சிறந்தங்கு -வேதன்முன்

சான்றுசொல் மக்கள் விலகாது மெய்யாகச்
சான்றளிக்க வேண்டுமே; தீதேபொய்ச் -சான்றுரைத்தல்

சான்றுசொல் மக்கள்பொய் என்றே அறிந்திட்டால்
சான்றளித்தோன் தண்டனை யிட்டுடும் -சான்றளித்த

பொய்சான்றால் கைபோனால் சான்றளித்தோன் கையெடுப்பீர்
பொய்சான்றால் கண்போனால் கண்ணெடுப்பீர் -பொய்சான்றால்

சாகடித்தால் சான்றளித்தோன் சாகச்செய் நீதியது
தீகரையோன் பொய்ச்சான்று கேள்

28
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பகைவர் எதிராக போர்செய்யப் போக
பகைவர் படைக்கண்டு அஞ்சித் -திகையீர்

பகைவர் அழிக்க எகிப்துனின்று உன்னை
வகையழைத்த தேவனுன் னோடு -பகைவர்நேர்

போர்செய்யப் போகுமுன் ஆசரியர் சேர்ந்துவந்து
போர்செய்யப் போகின்றீர் மக்களே -போரோ

மனங்கலங்கி நீரும் துவளாதீர் உங்கள்
இனயிறை கூடயிருப் பார்கேள் -இனமே

அழிப்பாய்நீ தேர்கள் பரிகள் படைகள்
அழிசெல்லும் போது படைசேர்த் -தழித்திடப்

போகிறோம் போகுமுன் மக்களைச் சேர்த்துநீர்
ஆகாதோர் வேறு பிரித்திடு -ஆகாதோர்

நெல்லை விதைக்க வயல்கொண்டு அவ்வயலின்
நெல்லை புசியா மனிதனோ -நல்லதாய்

சாறெடுக்க ஆலைசெய்து அவ்வாலை யின்னின்று
சாறுகுடி யாதோன் தவிர்த்திடு -தேறத்

திருமணம் செய்ய தனக்கென பெண்ணை
திருமுன் நியமித்தோன் வேண்டாம் -விரைவாய்

திருமக்கள் தன்னை பிரித்து மனைசெல்
அரியச் செயல்நிறை வேற்ற -எரிய

மனமஞ்சு மாந்தர் இனத்திலே மற்றோர்
மனமஞ்ச வைப்பார் தவிர்ப்பாய் -இனத்தில்

திடனில்லா மாந்தர் எவரும் தவிர்த்து
உடனே திருப்பி அனுப்பு -இடத்திலே

மக்கள் தலைவர்கள் பேசிய பின்னராய்
மக்கள் படைமேல் தளபதிகள் -தக்கவர்

தேர்ந்தெடுத்தப் பின்செல்வீர் போருக்கு சீராரே
சீர்படை சேர்க்கும் முறை

29
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
போர்வகை யாதெனில் போர்செய் நகரின்மேல்
போர்புரிய வந்துள்ளோம் வீண்போரேன் -போரில்

அமைதியாய் முன்பணிய தூதனுப்பு கேட்டால்
அமைந்து பணிந்திடச் செய்வீர் -அமைதிசெல்

தூதர்சொல் கேளா நகரை அழித்திடுவீர்
தூதர் அமைதிசொல் விட்டாரே -வேதன்சொல்

ஆடவர் எல்லாம் அறுத்து யெறிந்திடுவீர்
மாட மகளிர் உமக்காக -வேடன்போல்

இவ்வகைச் செய்வீர் அனைத்து நகருக்கும்
இவ்வகை தூர நகருக்கும் -அவ்வகை

ஆறினம் தீண்டாது வாழும் தினையெல்லாம்
கீறி அழித்திடு ஆங்குநீர் -கீறி

அழிக்காது ஆறினத்தில் மீதியாய் வைத்தால்
அழிக்காத ஆறின மாந்தர் -அழிவழியாம்

பொய்ச்சிலைகள் பின்பற்ற செய்வா ரதனாலே
மெய்த்தேவன் சொல்தனை பற்றிடு -மெய்யார்

நகரை பிடித்திட சுற்றிலும் சூழ
நகர்வெளி யுள்ள மரங்கள் -வகையறுக்க

வேண்டாம்; புசிக்கக் கனிமரம் விட்டுவிட்டு
வேண்டாத வீண்மரங்கள் வெட்டு

30
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருகர்த்தர் தந்திடும் தேசத்தில் ஆங்கே
வரைவெளியே ஓராள் கொலையாய் -யிருக்கண்டு

மூப்பரோ டாசரியர் சேர்ந்து அருகாமை
மூப்பரளக் கச்சொல் நகர்வரை -மூப்பரவர்

வேலைக் கொளாக்கிடாரி தன்னை நகர்மூப்பர்
மேலில் மலைப்பள்ளத் தாக்கிலே -மேலார்

நகர்மூப்பர் மேம்மேல் தனதின்கை யிட்டு
நகர்ப்பழி இல்லையென்று கூறு -நகர்ப்பழிதீர்

மூப்பர் கிடாரியை வெட்டியபின் கைக்கழுவி
மூப்பர்யாம் சொல்கின்றோம் இப்பழி -தீப்பழி

எங்கள் நகர்மே லிலையேனென் கண்ணாலும்
இங்கிவனைக் கண்டதிலை சொல்லிட -மங்காதார்

ஆதலினால் மீட்டயெம் தேவனே தீப்பழி
வேதனை எம்மேல் சுமத்தாதீர் -வேதனே

எம்மேல் இரங்கிடும் என்றுகூற தீப்பழி
அம்மாந்தர் மேலிராது போம்கேள்மின் -அம்மான்

திருகர்த்தர் பார்வைக்குச் செம்மையாய் ஆங்கு
திருமக்கள் செய்தால் குருதி -திரைப்பழி

உன்நடுவின் னின்று விலக்கிவிடு நன்றாமே
என்றென்றும் செய்வீர் விதி

31
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பகைவர் எதிராகப் போர்செய்ய நல்லார்
பகைவரைக் கையளிக்க பல்லோர் -பகையோர்

சிறைபிடித்தோர் தன்னில் அழகாக ஆங்கே
சிறைபெண் மணக்க விதியே -அறையில்

சிறைபெண் தலைசிரைத்து தன்நகம் வெட்டி
சிறையாடை விட்டு கழுவ -அறைவீட்டில்

பெற்றோர் நினைவாய் ஒருமாதம் காத்திருந்து
மற்றபின் பெண்மணம் செய்திடு -மற்றும்

மணம்செய்து பின்னர் அழகியின் அன்பில்
குணம்தெரிய விற்காது ஈனள் -மணம்செய்த

காரணத்தால் ஆதாயம் தேடாது போகவிடு
வேரருப்பீர் வாழ்வில் பொருளாசை -பாரில்

இருமனைவி கொண்டோன் விருவெறுப்பு செய்யா
திருமகன் மூத்தோன் முதலே -திருப்பங்கில்

ஈராக முன்பிறந்தோன் கைத்தந் திடச்சொல்வீர்
பேரவனே முன்பிறந்த தால்தானே -பாரீர்

மனைவியை காழ்ப்பாக பார்த்தாலும் அப்பெண்
வினைபெற்ற முன்பிறப்பை தள்ளி -வினைவேறு

பிள்ளைக்கு சொத்தில் தலைப்பங்கு தந்திடாதே
பிள்ளைகளில் முன்பிறந்தோன் பங்கு

32
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பெற்றோரின் சொல்கேளா ஈனனவன் தண்டனை
பெற்றும் அவர்களுக்குக் கீழ்ப்படியா -அற்றாய்

அடங்காத பிள்ளை இருந்தால் பிடித்து
அடங்கோன் அவைமுன் நிறுத்த -இடத்தே

அடங்காத பிள்ளை தனைநகர் மாந்தர்
அடங்கோன் விழக்கல் லெறிவீர் -அடங்கோன்

வகையழியக் கண்டு இனமற்றார் அச்சம்
வகைக்கொள்வர் நேரார் இனமே -வகையாய்

மரம்மேலே ஏற்றி நிறைவேற்றும் வன்செய்
மரம்மேமே தூக்கப் பெறுவோன் -திரைபின்

இறைவனால் வன்கெடுசொல் பெற்றோன் அதனால்
கறையிரவு தொங்க விடாது -திரைபின்


இறைசொல் கடைபிடிப் பீர்

33
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தமையருக்குச் சொந்தமான ஆமே கழுதை
தமர்காணா விட்டுத் திரிந்தால் -தமையரிடம்

சேர்த்திடு; அத்தமரில் தூரமென்றால் தேடிவர
சேர்த்திடு மாக்கள் தனைநீரே -நீர்வெளியில்

மேலாடை வேறேதும் அவ்வகை கண்டாலே
மேலவர் சொல்படி கொண்டுப்போய் -சீலதமர்

வந்துகேட்க தந்திடுவீர் காணா ததுபோல
மந்தமாய் விட்டுவிடா தீர்எதுவும் -வந்த

தமரின் விலங்கேதும் கீழ்விழ காணா
தமனாகப் போகாதே; வீழ்ந்த -தமன்விலங்கு

காலூன் றியெழ உதவிசெய் திட்டுப்பின்
மேலவர் சொல்படி செல்லுவாய் -சீலாரே

ஆடவரின் ஆடைகளை பெண்தரிக்க வேண்டாமே
ஆடவர்க்கும் பெண்களின் ஆடைகள் -மூடவிடீர்

பாலினர் ஆடைமாற்றி யேயுடுத்தும் மாந்தரை
சீலார்க் கருவருப்பு கேள்

34
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
வழிசெல்ல மேலே மரத்திலோ பாதை
வழியோர மாக குருவி -வழிசெய்ய

கூடுகண்டு தாயோடு முட்டைகள் குஞ்சுகள்
கூடினின்று கையெடுக்கா தீர்நீரும் -கூடுவிட்டு

தாய்ப்பறவை போகவிட்டு குஞ்சுகளோ முட்டையோ
தாய்ப்பறவை காணா தெடுத்திடலாம் -தாய்ச்சேர்த்து

குஞ்சுகள் முட்டைகள் ஆகாது தேவன்சொல்
அஞ்சி நடந்தால் நலம்கேளாய் -தஞ்சயிடம்

வாழ ஒருவீட்டை நீகட்ட மேலிருந்து
கீழே விழாதபடி கைச்சுவர் -வாழும்நீ

கட்டிடிடு; அப்போது சென்னீர் பழிசேரா
கட்டிடம் கட்ட விதிதந்தார் -நட்டநல்

சாறு தருந்திராட்சை தோட்டத்தில் கீழாக
வேறுவிதை போடாதே போட்டாலே -கூறுதீட்டு

எல்லாமாய் ஆகும் அதனால் விதைகலப்பு
இல்லாமல் நாட்டில் உழுதிடுவீர் -அல்லாது

சேர்த்துழாதே ஏறு கழுதை இரண்டையும்
சேர்த்தரி மாறுநூல் வேண்டாமே -சேர்ச்சட்டை

தன்னிலே நாற்கடை யில்நல்ல தொங்கல்கள்
அன்றாடம் சேர்த்து உடுத்து

35
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருமணம் செய்தவளின் கன்னிமை கேள்வி
திருமணம் சேய்தவன் கேட்க -திருமண

நல்லுறவின் நல்லிரவு ஆடைதனை சான்றாக
நல்லார்முன் பெற்றோர் கொடுத்திட -நல்லார்முன்

கன்னிமையின் சான்று உறுதியென் றால்ஆணை
கன்னிமை கேள்வி தவறாக -வன்னாய்

மனதிலே வேறுவைத்து கேட்டதனால் தண்டம்
இனமூப்பர் ஆங்கே விதிக்க -இனத்திலே

கன்னியை தாறுமாறாய் பேசியதால் ஆடவன்
கன்னிதண்டம் பெற்றோர்க்கை தந்திட்டு -கன்னியைத்

தன்மனை யாளாய் உயிர்நாளுந் தள்ளிவிடா
தென்றும் மணநேமம் காத்திடவே -அன்றியும்

கன்னிமையின் சான்று உறுதிசெய் யாதபோது
கன்னிமையை வேற்றா னிடத்திலே -வன்னாய்ப்

புணர்ந்ததால் மங்கையை கல்லெறிந்து கொல்வீர்
புணர்தல் மணநேமம் காத்து -புணரத்

திருமண நல்லுறவை மீறி இருவர்
திருநேமம் விட்டுப் புணர்ந்தால் -அருவருப்பு

கல்லெறிந்து கொல்வீர் இருவரையும் மண்ணில்வாழ்
அல்லா தவரவர் கேள்மின்னே -நல்லாரும்

ஆடவனுக் குப்பெண் எனநியமித் தப்பின்னர்
ஆடவன் வேறாண் வெளிசேர்ந்தால் -ஆடவன்

தான்பொறுப்பு கல்லெறிவாய்; சீரில் இருவரும்
போன்ற வுரையது தீதறிவாய் -ஈன்றவன்

ஆடவனுக் குப்பெண் எனநியமித் தப்பின்னர்
ஆடவன் வேறாண் நகருள்சேர் -ஆடவன்

பெண்சேர் பொறுப்பாவர் கல்லெறிவாய்; சீரது
மண்ணில் உரையது நன்றாமே -எண்ணி

நகருள் புணர இழுத்தால் கதறி
நகராரை பெண்ணழைக்க லாமே -நகரவெளி

மன்றாடி பெண்ணழை சத்தம் நகருள்ளே
மன்றாட்டு கேட்காதே போமதனால் -அன்றியும்

ஆடவனுக் குப்பெண் எனநியமம் செய்யாதோள்
வேடனாய் ஆணவன் சேரக்காண் -ஆடவன்பெண்

சேர்ந்துவாழச் செய்வீர் உயிர்நாள் வரையிலே
சேர்ந்துவாழ நேமம் விதியாமே -சேர்ந்திடக்

கன்னியைக் கைபிடித்த காரணத்தால் பெற்றோர்க்கு
கன்னிதண்டம் தந்திட்டு கைப்பிடித்து -கன்னியோடாண்

சேர்ந்துவாழச் செய்வீர் உயிர்நாள் வரையிலே
சேர்ந்துவாழ நேமம் விதியதே -சேர்ந்துவாழ

தந்தை திருமணம் செய்த மடந்தையாள்
தந்தையின் நல்மனைவி யாதலால் -எந்நாளும்

அன்னையே நல்லபடி யாகத் தனையர்கள்
அன்னையைச் சேரா திரும்

36
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
விதையடிப் பட்டவர் அண்ணகர் சேரார்
அதுபோல வேசிமகன் சேரார் -இதுநேமம்

கர்த்தரின் நற்சபையில் பத்தாம் வழியாரும்
கர்த்தரவை சேரார் விதியது -கர்த்தரினம்

அம்மோ னியரும்கீழ் மோவாப் இனமக்கள்
நம்வழி வந்தபோது பீலேயாம் -எம்வழி

வந்தவரை சொல்லும் கெடுசொல்லே என்றதால்
அந்நியர் ஆனார் அவர்தாமே -அந்நாளில்

உன்னிறை உன்மேல் இரக்கமாய் எண்ணியதால்
உன்னிறை சொல்லதை மாற்றிவாழ்த்த -அன்பாலே

செய்தாரே ஆதலின் இவ்விரு மக்களின்
பொய்யமைதி நாடா திருப்பீரே -மெய்யது

சோதரனாம் ஏதோம் அருவருக்கா தேமண்ணில்
தீயாம் எகிப்தில் அலைந்திரிந்தாய் -சோதரன்

ஏதோம் எகிப்தினது மூன்றாம் வழியினர்
வீதம்சேர் நற்றவை யில்தாமே -ஏதும்

விலகிநில் தீயதை போர்செய்யும் போழ்து
விலகிரவில் விந்தாலே தீட்டால் -விலகியிரு

மற்றநாள் மாலைவரை நன்று; குளித்தபின்
நற்றார் நகருள்ளே வந்திடு -நற்றவரே

ஆயுதங்கள் தன்னிலொரு கோல்வைத் திருப்பீர்நீர்
வேய மலக்கழிவு தன்னைநீ -தீயவை

யென்றே குழியால் புதைத்திட கோலது
நன்றே இறைவன் விதியதே -என்றென்றும்

உன்னடுவே வாழ்கின்றார் நல்லிறைவன் தானங்கு
உன்மலம் கண்டு விலகாமல் -உன்னிறை

நித்தம் நடுவிலே வாழ புறமாக
தத்தம் மலத்தை மறைத்திடு -நித்தம்

உனைமீட்க தூயர் நடுவே உலாவி
வினைப்பகை விட்டுமீட்கத் தானே -வினையவர்

தூயர் இருப்பதால் என்றும் நகரைநீர்
தூயதாய் வைப்பீர் நலம்

37
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தன்தலை விட்டோடும் வேலையை காட்டாதே
வன்செயலால் வந்திருப்ப தாலேதான் -நன்செய்வாய்

உன்வாயில் ஒன்றிலே வாழகொடு தேர்ந்திடமே
உன்கையால் வன்செய் தவிர்த்திடு -உன்னுள்

இசுரேல் இனப்பெண்ணில் வேசி தவிர்ப்பீர்
இசுரேல் இனத்தாரில் ஆணுள் -வசைபுணர்

தீதே; அருவருப்பு வேசி பணமேகேள்
தீதாமே நாய்விற் றபணம்தான் -தீதாமே

சோதரன் கையிலே வட்டியேதும் வாங்காதீர்
சோதரனில் அந்நியர்கை வட்டியை -சோதரனில்

காரணியால் வாங்கலாம் வாழ்த்துவார் வட்டியைநீர்
சீராராய் வாங்கா ததாலங்கு -சீரார்

பொருத்தனை நற்பொருந்த அப்படி செய்வீர்
பொருத்தனை தாமதம் செய்யீர் -பொருத்த

பொருந்தினோர் கையில் இறைகேட்பார் அன்றோ
பொருத்தனை நற்பலி தீர்த்து -வரையில்

பிறனின் வயல்வெளியோ தோட்டமோ செல்ல
பிறன்பலன் கையெடுத்து ஆற்று -பிறன்பலன்

கூடையில் சேர்த்தோ அரிவாளால் வெட்டவோ
கூடாது நல்லிறை சொல்

38
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருமண நேமம் இதுவே இனமே
திருமணஞ் செய்த இருவர் -வரைமனம்

கேடென பெண்மணந்தோன் எண்ண மணமுறிவு
கேடாக சீட்டுதர விட்டுடுவீர் -கேடாக

வன்சீட்டு கைகொடுத்த பின்னர் மடந்தையாள்
தன்வாழ்வில் மீண்டும் திருமணம் -நன்றே;

வரைமனம் கேடுணர்ந்த ஆண்தள்ளுச் சீட்டைத்
தரமுன்னாண் மீள்மணம் தீட்டே -திருவும்

அருவருப்பாய் காண்கிறார் மீள்மணம் தன்னை
திருகர்த்தர் நேமம் சிறப்பே -திருவாய்த்

தரும்திருநாட் டில்பாவம் வாரா படிநல்
திருமண நேமம் அளித்தார் -திருநாட்டில்

பெண்ணைப் புதிதாய்த் திருமணம் செய்திருந்தால்
பெண்விட்டு போர்செய்ய போகாது -பெண்ணவளை

ஓராண்டு பெண்ணை மகிழ்விக்கச் சொல்வீரே
சீரார் சிறப்பாய் உரைத்து

39
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
அரைக்கும் திரிகையின் கற்கள் அடகாய்
கரத்தில் வினைவாங்க வேண்டாம் -அரைகல்

உயிரை அடகுபோல் என்பதால் வேண்டாம்
உயிரடகு நாட்டில் விடுத்து -உயிராம்

சகோதரரில் ஓராளை வன்னாய்த் திருடி
வகைவிற்றால் அத்திருடன் சாக -வகைசெய்வீர்

இப்படியே நாட்டில் இசுரேல் இனம்தீங்கை
தப்பா தகற்றிடு வீர்சீரே -எப்போதும்

லேவியராம் ஆசரியர் வன்தொழு நோய்பற்றி
மேவியுரைக் கும்சொல்லை பின்பற்றும் -தேவன்சொல்

தந்தேநான் கட்டளைகள்; மீண்டுவரும் போ(து)மிரியாம்
மந்தசெயல் எண்ணுவீர் நீரங்கு -முந்தி

அடகு பணம்மீண்டும் வாங்கிட நீங்கள்
அடகுவைத்தோன் வீட்டில் நுழையீர் -அடகுவைத்தோன்

வீட்டினது வாயிலிலே தானிற்பீர் மீறிநீர்
வீட்டுள் செலலாகா தென்றார்சீர் -நாட்டான்

அடகுவைத்தோன் ஏழையெனில் ஆடைதனை வைக்கா
அடகை இரவிலே தந்து -இடத்தில்

குளிரால் அவனவதி கொள்ளா திருக்க
வளிமூடு ஆடைத் திருப்பு -எளியவன்

ஏழை களத்திலே வேலைசெய்ய கூலியை
ஏழைக்கு அவ்விரவே தந்திடு -ஏழையவன்

கூலியை நோக்கியிருக் கின்றான் இரவிலே
கூலியைத் தாராமன் றாட்டுசெய் -கூலியாள்

ஏழை இரவில் பசித்து இறைஞ்சினால்
ஏழையின் மன்றாட்டை கேட்பாரே -வீழ

வகைச்செயல்கள் செய்யாதீர் ஏழைக்கு கூலி
வகைமாலை யில்தானே தந்து

40
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தந்தைக்காய் பிள்ளையும் பிள்ளைக்காய் தந்தையும்
எந்நாளும் கொல்லாதீர்; தன்தனதின் -மந்தசெய்கை

பாவத்திற் காக கொலைசெய்வீர் நாட்டிலே
பாவம்செய் வோர்வகை தீர்ப்புதான் -மேவிநீர்

அந்நியன் என்றே நியாயம் புரட்டாதீர்
அந்தபடி திக்கற்ற பிள்ளைக்கு -எந்நாளும்

நீதிசெய்து கைம்பெண்ணின் ஆடை அடகுவாங்கா
நீதிசெய் வீரே சிறந்தென்றும் -வீதி

எகிப்தில் அடிமையாய் நீயிருக்க கர்த்தர்
எகிப்தைவிட்டு உன்னை அழைத்த -வகையறிவாய்

செய்த அறுவடை தன்னில் ஒருக்கட்டு
வெய்யென் திரும்பாதீர் வீடுவிட்டு -அய்யா

திராட்சை ஒலிவம் பறிப்பீர் விடுத்து
திருவகை மற்ற தறுக்க -திருவில்

வறியவர் தந்தையிலார் கைம்பெண் பசிக்கு
அறுவடை செய்யாதீர் ஒட்டு

41
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
மனிதருள் ஏதும் வழக்குற நீதி
தனைத்தேடி நீதிமன்றம் வந்தால் -நனிசெய்தே

தீர விசாரித்து நீதி அறிவிப்பார்
சீராராம் நீதிபதி தானங்கு -சீரில்லா

குற்றம்செய் குற்றவாளி தீர்ப்பு அடியெனில்
குற்றவாளி கீழ்க்கடத்தி நாற்பதே -குற்றமடி

மீற சிறுமையாய் சோதரன் போவானே
மீறியே நீரடி யீரங்கு -மீறாது

போரடிக்கும் மாட்டினது வாயைநீர் கட்டாதீர்
போரடிக்கும் போழ்து உணவுண்ண -சீரார்

விடுமேறை என்றார் திருவங்கு நன்றே
படுமாடு உண்பது ஆங்கு -இடையிலே

சோதரன் பிள்ளை பெறாது மரித்தாலே
சோதரனின் சோதரன் பேர்காக்க -சோதரனின்

நல்மனையாள் சேர திருமணம் கட்டச்சொல்
நல்லாண் பெயர்விளங்க ஆங்குத்தான் -நல்லாணாம்

சோதரனின் சோதரன் பேர்காக்க நல்மனையாள்
சோதரன் சேரேன் எனசொன்னால் -சோதரனின்

மேலே மடந்தை உமிழ்ந்தங்கு காலணியை
காலை விடுத்தகற்று வாளங்கு -சீலார்சொல்

ஆளின் குறையில்லம் காலணியை அவ்வகை
ஆளிங்கால் விட்டகற்ற செய்தவனில் -கோளில்

உரைத்திடுவர் சோதரன் பேர்விளங்க செய்யா
திருந்ததானால் கேடுபெயர் சொல்லே -விரைந்தங்கு

ஆடவர் சண்டையிட உட்புகுந்தே பெண்ணவள்
ஆடவரில் தன்கணவன் தப்பிக்க -ஆடவனின்

மானத்தை கைநீட்டி தொட்டால் கரமறுப்பாய்
ஈனதொடு பெண்ணிரங் காதுசெய் -ஈனமாக

வெவ்வேறாய் பையில் நிறைகற்கள் தீதாமே
வெவ்வேறாய் வீட்டில் படியளவு -அவ்வகை

தீதாமே; சீராய் நிறைகற்கள் நற்படி
வேதவர்வைத் தின்புற வாழ்ந்திட -வேதனை

வேறாய் நிறைகற்கள் வேறாய் படியளவு
சீறில்லா வைத்திருப்போன் தன்னையே -சீறும்

அருவருப்பாய் கர்த்தர்க்குக் காணப் படுவான்
சரியாக சீரா யளப்பீர் -இருந்த

எகிப்தின்று வந்த வழியில் அமலேக்
வகையாய் இளைப்பான மக்கள் -திகைக்கவே

அஞ்சாது தேவன்சொல் கேளாது வெட்டினான்
மிஞ்சியிரா வண்ணமாய் வெட்டிபோடு -வஞ்சியொடு

நாட்டில் சிறப்பாய்க் குடிசேர்ந்த பின்னாளில்
நாட்டின் பகைவர்கள் அற்றுபோக -நாட்டில்

வரும்முன் அமலேக்கு செய்த செயலை
கரம்வைத்து வாங்கு பழி

42
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருவளிக்கும் நற்றேசம் சேர்ந்து வசிக்க
திருதரும் நற்பலன்கள் தன்னில் -தருவீர்

முதற்பலங்கள் எல்லாம் திருமுன்னே கூடை
யதில்போட்டு ஆசரியன் கையில் -முதலாகத்

தந்தையர்க்கு கர்த்தரவர் வாக்களித்த தேசத்தில்
வந்துசேர்ந்தேன் என்றே உமதிறையின் -சந்நிதியில்

செய்கிறேன் நல்லறிக்கை இன்றுநான் என்றாசன்
மெய்செவி கேட்க உரைத்திடு -செய்த

உரைகேட்ட ஆசரியன் கூடைபீடம் முன்னர்
தரும்கனிகள் வைக்க உரைப்பாய் -உரையே

அழிந்திடும் சீரிய தேசத்தான் எந்தை
வழிசென்றார் சிற்றார் எகிப்து -வழிசென்ற

சிற்றாராய் சேர்ந்தோம் எகிப்தில் திரட்சியாய்
நற்றவர் நாடோடி யாய்வளர்ந் -திற்றமாய்

மேலினம் ஆக அடிமைகளாய் வாதித்தான்
சீலரை கீழாண் அரசனவன் -சீலர்

ஒடுக்கத்தில் கர்த்தாவே மீட்டிடும் என்றே
நடுங்கும் கதறல் செவிகேள் -ஒடுக்கியோர்

தண்டித்தீர் கைபலத்தால் ஓங்கிய உம்புயத்தால்
விண்வியன்செய் செய்துநீர் மீட்டுவந்தீர் -விண்வியன்

மீட்டுதந்தீர் எங்களுக்கு இத்தேசம்; வந்துசேர்ந்த
நாட்டிலே பாலோடு தேனோடும் -நாட்டின்

முதற்கனிகள் கொண்டுவந்தேன் என்றுரைத்து ஆங்கே
முதற்கனிக்காய் கொண்டாடு வீர்நீர் -முதலார்

திருமுன்னே நீயும்சார் லேவியனும், உன்னில்
இருக்கிற நாடோடி யோடும் திருதேவன்

உன்கை அளித்த சிறப்பான வாழ்பொருள்
தன்னிற்காய் சேர்ந்து மகிழ்ந்திடுவீர் -அன்றியும்

பத்திலொருப் பங்குதரும் மூன்றாம் திருவாண்டு
பத்திலொருப் பங்குதனை வாயிலில் -தத்தமாய்

லேவியர் கைம்பெண்கள் தந்தையிலார் கையெடுக்க
மேலவர் முன்னுரை தீர்த்திட்டேன் -மேலார்

திருவே உரைபடி பத்திலோர் பங்கை
திருத்தமாய் சொன்னபடி தந்தேன் -திருவே

எழவிற்கோ இல்குறைக்கோ நானெடுக்க வில்லை
உழவின் வரத்தினது பங்கு -விழாதுநான்

கட்டளைகள் மீறாது நான்மறவா தேசெய்தேன்
கட்டளை பத்திலொருப் பங்குதனை -திட்டமாய்

செய்துமுடித் தேன்விண்ணின் ரெம்செய்கை கண்டுநீர்
செய்வீர் திருவாழ்த் துரைத்திடும் -மெய்யாமே

கட்டளைகள் நேமங்கள் நீசெய்ய ஆணையாய்
கட்டளை தந்தார் உனக்கின்று -திட்டமாய்

உன்முழு ஆன்மா முழுமன தோடுகாத்து
என்றும் நடப்பாய் சிறந்துநீ -இன்று

திருகர்த்தர் என்தேவன் என்றாய் இனமே
திருதந்த கட்டளைகள் எல்லாம் -சிரமேற்று

என்றுமே கைக்கொண்டு, சொல்லிற்குக் கீழ்ப்படிவேன்
என்றும் கொடுத்தாய்நீ வாக்காக -இன்று

திருவும் தருங்கட் டளைகள் படிகீழ்
சிரமேற் சிறஞ்செய் இனமே -திருவில்

புகழில் வியனில் உனைப்போல் எவரில்
இகத்தில் இனமெனதாய் தூய்

43
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தந்தையரின் தேவன் உரைபடியே தந்திட்ட
விந்தை நறுதேசம் ஆறுகடந்(து) -அந்த

திருநாட்டில் சென்றபின் ஏபால் மலையில்
திருநேமம் கல்லில் எழுது -திருசொல்போல்

கல்லுகள் பேராய் திருநாட்டி ஏபாலில்
கல்மேலே பூசுசாந்து, சொற்களை -கல்மேல்

எழுதி; இரும்பு படாது செதுக்கி
வழுவிலா பீடத்தைக் கட்டு -அழகாய்

முழுக்கற்கள் கொண்டு பலிபீடம் செய்வாய்
வழுவிலா நற்பலி தீயில் -வழுவிலா

மாக்கள் பலிதந்து கர்த்தரின் சந்நிதியில்
மாக்கள் புசித்து மகிழ்ந்திடு -வாக்குரை

லேவியராம் ஆசரியர் கூட இருக்கையில்
மேவியே மோசே இசுரேல்கேள் -தேவனாம்

யாவேயின் மக்களானாய் இந்நாளில்; ஆகையால்
யாவேயின் சொல்கீழ்ப் படிந்திடு -தேவனினம்

யோர்தான் கடந்தபின்பு சொல்லாலே வாழ்த்திட
சீரார் சிமியோன்சேர், லேவியூதா, -சேர

இசக்காரும், யோசேப்பும், பென்யமீனும் ஆறாம்
திசைகெரிசீம் தன்னிலே சொல்லு -மிசைநதி

யோர்தான் கடந்தபின்பு சொல்லாம் கெடுசொல்லை
சீரினம் ரூபன்காத் ஆசேரும் -சேர

செபுலோன்தாண் நப்தலி என்றினம் ஆறும்
யெபால்மலை மேலே உரைக்க -சபைகேள்மின்

அப்பொழுது லேவியர் சத்தமிட்டு பார்த்தங்கு:
எப்பொழுதும் கர்த்தர் அருவருக்கும் -தப்புசெயல்

வார்ப்பிக்கப் பட்ட சிலையை ஒளிப்பிடத்தில்
சேர்த்தோன்மேல் சாபமென சொல்லிட -சீராராம்

மக்களும் அச்சொல்லிற் காமென் எனச்சொல்ல
மக்களில் பெற்றோர் கெடுசொல்லால் -தக்காக்

கெடுசொன்னோன் மேல்சாபம் சொல்ல இனத்தார்
கெடுசொல்லிற்(கு) ஆமெனென சொல்லிட -வையில்

பிறனெல்லை ஒற்றி செயற்தவறு சேய்தோன்
அறமில்லோன் மேற்பாவம் சொல்லு -சிறப்பில்

புரிந்தோன்மேல் சாபமென ஆமென் இனம்சொல்
குருடன் வழிவிலக்கல் கேடு -இரும்நாட்டில்

நாடோடி திக்கற்றோன் கைம்பெண் இவர்களின்
நாடிவர தம்நியாயம் செய்புரட்டு -கேடவர்மேல்

சாபமென சொல்ல; இனமுமங்கு ஆமெனென
சாப முரைத்திடச் சொல்லங்கு -சாபமே

தந்தையின் நல்மனையாள் தன்னையெவன் வன்புணர்ச்சி
எந்நாளும் சாபம் பெறவுரை -அந்தபடி

மக்களும் ஆமெனென சொல்லி விலங்கோடு
தக்கா புணர்பவன் கேடுசெய்வோன் -மக்களும்சொல்

தந்தைக்கோ தாயிற்கோ வித்தாம் மகளையங்கு
சிந்தையிலா வன்புணர்வோன் மேல்சாபம் -அந்தபடி

மக்களும் ஆமெனென சொல்லிட மாமியோடு
தக்கா புணர்பவன் கேடுசெய்வோன் -தக்கார்

ஒளிப்பிடத்தில் கொல்பவன்மேல் சாபமெனச் சொல்லு
அளிமக்கள் எல்லார்சொல் ஆமென் -எளியோனாம்

குற்றமிலா தோனை கொலைசெய்ய கையூட்டு
அற்றான் சபிக்கப்பட் டோன்என்றே -குற்றம்

அளிமக்கள் எல்லார்சொல் ஆமெனென இந்த
அளிநேம சொல்லெல்லாம் கேட்டும் -அளிநேமம்

பின்பற்றக் கைக்கொள்ளா தோன்மேலே சாபமென
பின்மக்கள் ஆமென் உரைத்து

44
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இன்றுநான் நன்றாய் விதிக்கிற கட்டளைகள்
என்றும்நீ செய்ய கவனமாகி -மன்னர்சொல்

மெய்யாகக் கேட்டு செவிகொடுத்தால், உன்தேவன்
மெய்பூமி மேன்மையாய் வைத்திடுவார் -மெய்யாராம்

உன்தேவ சத்தம் செவிகொடுக்க இப்பொழுது
இன்சொல்லாம் வாழ்த்துக ளெல்லாமே -உன்மேல்

பலிக்கும். நகர்வெளி என்றெங்கும் பேறு
நிலந்தரு நற்கனி பெற்று -இலாசெல்வம்

ஒன்றுமிரா; கூடையும் மாப்பிசையும் தொட்டியும்
நன்றாய் இருக்கும்; வரத்திலும் -நன்மையாய்

போக்கிலும் பேறுபெற்று வாழ்வீர் விரைந்தங்கு
தாக்க வருவோர் கலைந்தவர் -தாக்குதல்

தாளாது ஏழு வழிகளில் ஓடுவார்கள்
கேளினமே வந்தார் ஒருவழியாய் -கேளினமே

கட்டளைகள் கைக்கொண்டு கர்த்தரளி தேசத்தில்
இட்டபடி தம்தூய நல்லினமாய் -எட்டா

நிலையில் திருவைப்பார்; அப்போது கர்த்தர்
நிலைபெயரைக் கொண்ட இனத்தார் -நிலையஞ்சி

பூமியின் மக்கள்காண் பர்சீரார் கர்த்தரும்
தீமையிலா உன்தந்தை யர்க்கொடுப்பேன் -பூமி

உரைத்த திருத்தேசம் தன்னில் கனியை
உரைத்த படியே திருவும் -கரந்தருவார்

கர்ப்பக் கனியிலும், உன்மிருக நற்பலனும்,
கர்த்தரவர் கட்டளை யிட்டவர் -கர்த்தரவர்

ஏற்ற நலகாலத் தில்மழை பெய்யவும்,
போற்றிசெய் வேலையில் எல்லாமே -போற்றிவாழ்த்தி

செல்வக் கருவூலம் வானைத் திறந்திடுவார்
செல்வம் திறந்து கடன்தருவாய் -செல்வமில்

நீயோ கடன்வாங்கா தேயிருப்பாய் இன்றுநான்
நீயுன் செவிகேட்கும் நேமம் - அனைத்திலும்

சாயாக் கடைப்பிடித்தால் மேற்சொன்ன வாழ்த்துகள்
தேயாது தந்திடுவார் சீர்தானே -சாயாது

இன்றுநான் உங்களுக்கு சொல்லும்சொல்
நன்றிலாது விட்(டு)விலகி வேறுதேவர் -தன்னைநீர்

சேவிக்க வலதிடதாய் போகாமல், நின்றாலே
மேவிதலை யாய்வாலா காதிருப்பீர் -தேவயினம்

கீழாகா மேலாவாய் என்றே உரைத்தனன்
வீழா திருமக்கள் பெற்றிடும் -வேழா

திருவாழ்த்து தன்னையே மோசே பகன்றான்
திருச்சொல் கடைப்பிடிக்க சீர்

45
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இன்றுநான் உங்களுக்கு சொல்லும்சொல் சீராமே
நன்றிலாது விட்(டு)விலகி வேறுதேவர் -தன்னைநீர்

சேவித் திடவலதாய் போனால் கெடுசொற்கள்
மேவிவரும் நான்சொல் பவைபலித்து -ஏவ

நகர்வெளி எங்கும் சபிக்கப்பட் டோனாய்
வகைகூடை மாத்தொட்டி கேடாய் -வகைசாபம்

பிள்ளைக் கனியும் நிலக்கனியும் சாபமாய்
கிள்ளிப்போம் செல்வ மெலாமங்கு -மெள்ள

வருகையிலும் சாபமே, போகையிலும் சாபம்.
திருவிட்டு செய்கிற தீச்செய் -கரத்தினால்

கெட்டுப்போய் நீஅழியு மட்டுமாய், கைகளை
யிட்டுச்செய் எல்லாம் சபித்திருக்க -நட்டவர்

காணியாம் தேசத்தில் கர்த்தர் உனையழிக்க
காணங்குக் கொள்ளைநோய் தந்திட்டு -வீணாக

ஈளையினால், காய்ச்சலினால், வெம்மையினால், தீயினால்
வேளை வறட்சியினால் வாதுவர வேளை

கருக்காயால், விண்பனியால் வாதித் தழிய
இருமட்டும் உன்னைத் தொடரும் -இருந்தலைமேல்

வானமது வெண்கலமாய் கீழுள்ள பூமியும்
ஏனோ இரும்பாகப் போமங்கு -வானிறை

விண்ணின்று பெய்மழை தூசியாய் மண்ணாய்பெய்
விண்ணின்று நீயழியப் பெய்திடும் -விண்ணார்சொல்

உன்பகைவர் மேற்கொள்வர் உன்னைத்தான்; ஏழுவழி
என்றே முறிந்தோடு வாய்நீதான் -அன்றியும்

பூமியின் மூலையெலாம் போவாய் சிதறுண்டு
பூமியின் காட்டு மிருகங்கள் -பூமேல்

பறந்திடு மெல்லா பறவைக்கும் ஊணாய்
இறந்தவுன் இன்னுடல் போகும் -இறந்தோன்

இரையாய் உடல்தின்னும் மாக்கள் விரட்ட
கரமில்லா போகும். குணமில் -எரிபந்த

சீழ்பருக்கள் நாடாம் எகிப்தினது வாதைகள்
கீழ்மக்கள் மீது வருமன்றோ -வீழ்மனதின்

எண்ண மயக்கத்தால் கண்குருடால் வாதிப்பார்
விண்ணார் மனந்திகைக்கச் செய்திட்டு -மண்ணில்

குருடன் தடவித் திரியுமாப்போல் காலை
திரிவாய் தடவி இருள்சூழ் -திருக்க

வழிகளில் ஒன்றுமே வாய்க்காபோம்; எந்த
வழியும் உதவிசெய்வார் இல்லா -தழிய

ஒடுங்கி பறிகொடுப்போன் ஆவாய் திரிந்து
எடுத்த செயலெலாம் வீணாய் -எடுத்துநீ

பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன்
பெண்ணை புணர்வானே; வீடுகட்ட -மண்ணில்

குடியிருக்க மாட்டாய்; திராட்சை விதைத்தும்
குடித்திடாய் சாறோ பலனை -அடித்தவர்

ஆவினம் கண்முன்னே ஊனாக்கி உண்பரே
ஆவினம் மாக்களெலாம் கொள்ளையாக -தேவ

உதவியில் லாது விடுவிப்பார் இல்லா
ததனால் தவிப்பாய் உழன்று -விதமாகப்

பிள்ளையோடு பெண்களும் அந்நியர்கை போவார்கள்;
பிள்ளை வரும்வழி வைத்தங்கு -நொள்ளையாய்

உன்கண்கள் நாடோறும் பூத்துப்போம்; உன்கையில்
என்றும் பெலனில்லாப் போம்தானே -அன்றியும்

உன்நிலத்தின் எல்லாக் கனியையும், கைச்செயல்கள்
தன்னின் பலனையும் நீஅறியா -வன்னார்

புசிப்பார்கள்; நீயெல்லா நாளும் ஒடுங்கி
திசையில் நொறுங்கி உழன்று -அசைவிலாதே

உன்கண்கள் காண்செயல்க ளாலே மதிமயங்கி
உன்கால் தொடங்கி தலையுச்சி -வன்பருக்கள்

உன்மேல் குணமாகா வண்ணம் முழங்கால்கள்
உன்தொடைகள் எல்லாம் வருமேகேள் -என்றும்

உனையும், உனக்காக ஏற்படுத்திக் கொண்ட
உனது அரசனையும் விட்டு -இனமறியா

மக்களிடம் போகச்செய் வாரே திருவில்லா
மக்களின் தேவர் பணிவாய்நீ -தக்கா

உனைக்கொண்டு போய்விடும் மக்களுள் நீயோ
வினைதிகைப்பு வன்பழஞ்சொல் லாவாய் -வினைவிதைக்க

மிக்காய் விதையை வயலுக்குக் கொண்டுபோவாய்,
தக்காது கொஞ்சம் அறுப்பாய்நீ -மிக்கறுப்பும்

வெட்டுக் கிளிநிலத்தின் நெல்லெல்லாம் தின்றுபோடும்
நட்ட திராட்சையின் சாற்றைநீ -கிட்டிப்

பருகுவ தில்லையே பூச்சி அதைத்தின்(று)
இருமிட மில்லா வகையாய் -நருநெட்(டு)

ஒலிவ மரங்கள் இருக்குமே மிக்காய்
ஒலிவயெண் ணெய்யோ வராது -ஒலிவமர

பிஞ்சிலே தானுதிரும்; பிள்ளை திருச்செல்வம்
பிஞ்சிலே போவர் சிறையாக -மிஞ்சிய

உன்மரங்கள் எல்லாம்சேர்த் துன்நிலத்தின் நற்கனிகள்
தன்னை வரும்விட்டில் பாழாக்கும் -உன்நடுவே

வாழவந்த அந்நியன் மேற்பட்டு மேன்மேலாய்
வாழ இனம்நீரோ தாழ்ந்துபோய் -வாழவந்த

அந்நியன் உன்னிடத்தில் செல்வ கடன்படான்,
அந்நியன் கையில் கடன்படுவாய்; -அந்நியன்

உன்மேலே மேற்றலையாய் நீவாலாய் தானிருப்பாய்
தன்தேவன் சொற்கேளா தோன்சாபம் -கொன்று

அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,
அழித்து அடையாள மாக -பழிச்சொல்லாய்

எல்லாம் இருந்தும் மனமகிழ்ச்சி யோடுகளிப்
பெல்லாம்சேர் தேவனை விட்டுவிட்டு -அல்லாமல்

எல்லாம் குறைவுபட்டு, பட்டினியாய் தாகமாய்
நல்லாடை இல்லாது நல்தேவன் -வல்லார்

எதிர்வரச் செய்ய பகைவரைச் சேவித்(து)
எதிரி அழிநுகம் எஃகாய் -எதிரி

கிழவனென்றும் பாராமல், வாலிபன் என்றும்
அழுகைக் கிரங்காம லும்வன் -வழுமனம்

கொண்ட தெரியா மொழிபேசு மக்களை
மண்கடை விட்டுவர செய்வாரே -மண்ணில்

அழியுமட்டும் மக்கள் பலனை, நிலத்தின்
வழிகனியைத் தின்பாரே ; உன்னை -யழித்தவர்

தீருமட்டும் உன்நெல்லும் சாறு திராட்சையும்,
சேரமாக்கள் இல்லாது போம்தானே -வீரர்கள்

தேசமெங்கும் நீநம்பி உள்ளிருக்கும் உன்மதில்கள்
நாசமாகி கீழே விழுமளவும், -வீசைபகை

வாசல் களிலெங்கும் முற்றிகைப் போடுவர்;
வாசல் களிலெங்கும் போட்டிடுவார் -நாசமாக்க

உன்பகைவர் முற்றிகைப் போட்டு நெருக்கவும்
உன்தேவன் தந்த கனியான -உன்பிள்ளை

ஊணாகத் தின்பாய்நீ அக்காலம் செல்வமழி
வீணாய் பகிராரே ஊன்தனை -ஊணில்லா

உன்பகைவர் முற்றிகைப் போட்டு நெருக்கவும்
உன்னிடம் எல்லாம் குறைவுபட -உன்நட்டான்

தின்னுவான் ஊணை மறைவாக. ஈதெல்லாம்
உன்தேவன் சொல்கேளா வாதைதான் -நன்றாய்த்

திரட்சியிலே விண்மீன்கள் போலிருந்த நீங்கள்,
சிரமேற்கா காரணியால் கொஞ்சம் -கரையினமாய்ப்

போவீர்கள். உங்களுக்கு நன்மைசெய்ய உங்களை
மேவிபெருஞ் செய்தார் அழித்திடுவார் -மேவிதான்

காணியாய் நீர்பெறும் தேசத் திலிருந்து
காணாப் பிடுங்கிப்போ டப்படுவீர் -வீணாய்

கடைவரை மக்களுள் உன்னை சிதறி
திடனில் சிலைகள்சே வித்தே -அடையுமம்

மக்களுள்ளே ஆங்கே யுனக்கு இளைப்பிராது,
தக்கதாய் தங்கித் தரிக்கயிடம் -தக்கிராது

தத்தளிக்கும் உன்மனது, சோர்ந்துபோம் கண்களையும்
நித்தம் மனக்குழப்பம் தான்மிஞ்சும் -நித்தமும்

ஐயத்தால் உன்னுயிர் ஊசலாடும்; உன்னுயிர்பால்
ஐயமுற நம்பிக்கை யில்லாமல் -வைய

இரவும் பகலும் திகில்கொண்டு நீயும்
இருப்பாய் நிதமுமங்கு அஞ்சி -இருளில்

விடியலில் எப்போது மாலை வருமோ
நெடிதாய் இரவே விடியல் -கடிதாய்

வருமோ எனத்திகிலால் கண்காணும் காட்சி
வருந்திநீ வாயால் பிதற்றி -வருத்தம்

இனிக்காணாய் என்றுநான் சொன்னவழி, கர்த்தர்
உனைக்கப்பல் தன்னில் எகிப்து -முனைக்கொண்டு

போகச்செய் வாரே பகைவர்க்கு வேலையாளாய்
போகவிற்றால் கொள்வா ரிலை

46
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ஓரேபில் நல்லினத்தா ரோடு உடன்படிக்கை
சீரவர் செய்திட்ட பின்னராய் -சீரவர்

மோவாப் எனும்நாட்டில் சொன்ன உடன்படிக்கை
தேவன்சொல் கேட்பீர் இவைதானே -மேவியவன்

மோசே இசுரேலர் எல்லாம் வரவழைத்து,
மோசே அவர்களை நோக்கிச்சொல்: -வீசை

எகிப்தென்னும் தேசத்தில் உங்களின் கண்கள்
வகைமுன் னனைத்தும் அழித்தார் -எகிப்தின்

அரசனவன் பார்வோன் அவனுடைய வேலை
அரசினது தேச முழுதும், -அரசர்நம்

தேவன்செய் மிப்பெரிய சோதனைகள் வாதைகள்
மேவும் அடையாளங் கண்டீர்நீர் -தேவனவர்

உங்களுக்கு கர்த்தர் உணர்த்தக்க மேன்மனதும்
இங்கே விழிகாணத் தக்ககண்கள் -மங்கவே

இந்நாள் வரைத்தர வில்லையே; கேள்தக்க
அந்தோ செவியிலை கேள்மின்னே -எந்நாளும்

நான்உங்கள் தேவனென்று நீங்கள் அறிந்துகொள்ள
நான்நாற் பதாண்டுகள் உங்களை -நான்நடத்தி

பாலையில் ஏந்தி வரவைத்தேன்; உங்களின்
மேலிருந்த ஆடைகிழி யாதிருந்த -மேலார்செய்

காலிருந்த உன்செருப்பு தேயா திருந்ததே
காலைமாலை அப்பம் புசியாது -சீலசாறு

நீரருந்தா தேயிருந்தீர்; நீங்கள் இடம்சேர
வீரசிகோன் ஓக்விழுந்தார் மண்ணிலே -சீராக

கீழ்த்திசை தேசத்தைப் ரூபன் மனாசெபாதி
வாழ்காத்தென் நல்லினத்தார்த் தந்தோம்நாம் -வாழ்நல்

இனமிப் பொழுதும் செயலெலாம் வாய்க்க
மனம்கொண்டு சொல்கீழ் படிவீர் -இனத்தாரே

உன்தேவன் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபென்
உன்முன்னோர்க் கையிட்ட ஆணைக்காய் -இன்றுன்னைத்

தன்மக்கள் என்றேற் படுத்திடவும் தாம்உனக்கு
நன்தேவ னாயிருக்க வும்தானே -என்றென்றும்

தேவனாம் கர்த்தர் உடன்படிக்கைக் கின்றவர்
தேவன்செய் ஆணை யுறுதியை -தேவமக்கள்

உட்பட நற்குலத்தின் சீர்தலைவர் மூப்பர்கள்
நட்டார் எலாரும் உளரல்லோ -நட்டாராம்

உங்களின் பிள்ளைகள், உங்கள் மனைவிகள்,
உங்களின் பாளயத்துள் அந்நியர் -இங்கு

திருவின்முன் நிற்கிறீர்; உங்களோடே மட்டும்
திருச்சொல் உறுதி யிலாது -திருமுன்னே

இன்றிங்கே நம்மோடே கூட திருமுன்னர்
மன்றாட நிற்கிறவர் மற்றுமாய், -இன்றிங்

கிராதவர்கள் கூட அதைசெய் கிறேன்நான்
இராதவரும் சேர்த்தாணை செய்து -இருந்தோம்

எகிப்தென்னும் தேசக் குடியாய், கடந்த
வகையிட மக்கள் நடுவில் -திகைநடந்து

வந்த கதையும் அறிவீர்கள். பொன்வெள்ளி
வந்த சிலைமரக் கல்தானே -அந்த

இனமவரின் தேவரென பொய்போற்றப் போக
இனத்திருவை விட்டுவிட்டு செல்ல -இனத்திலே

நஞ்சு வளராத வண்ணம்வேர் தன்னையும்
அஞ்சி பிடுங்கி எறிந்திடுவீர் -மிஞ்சியவர்

விட்டுச் செலவங்கு ஆணை யுறுதிசொல்
கெட்ட வழியில் மதுவருந்தி -இட்டப்

படிநடந் தாலும் எனக்குச் சுகமே
அடிமனதை தேற்றுமன்னி யார்கேள் -இடிந்தவர்

அப்போ சினங்கொண்டு கர்த்தர் எரிச்சலுடன்
தப்பாது இந்நூலில் தானெழுத்தாம் -தப்பாத

சாபமெலாம் மேற்றங்க; கர்த்தர் அவன்பேரை
சாபமாய் விண்கீழ் குலைத்திடுவார் -ஏபால்சேர்

இந்நூலில் தானெழுத்தாம் சாபங்கள் தப்பாது
எந்த இனத்திலும் சேராது -அந்தபடி

எல்லாவற் றிற்கும் புறம்பாக்கிப் போடுவார்
வல்லார் இறைவனின் சொல்லிது -அல்லாமல்

பின்எழும்பும் உன்வழியார் அந்நியர் ஈதுகண்டு
மன்னர் வருவித்த வாதைகள் -வன்நோய்கள்

காண, திருகர்த்தர் வெஞ்சினத்தால் சோதோமும்
வீணர் கொமோராவைப் போல்செய்தார் -வீணராம்

அத்மா செபோயீம் கவிழ்த்தது போலவே
இத்தேச நல்வள மெல்லாமே -வித்தும்

விதைப்பும் விளைவும் இலாது, எரிகல்
சிதையுப்பால் காண்பார் எரித்தே -வதையாக

வெஞ்சினம் பற்றெரிய காரணம் என்வென்று
அஞ்சிடும் மாந்தரவர் சொல்லுவார் -வெஞ்சிறை

விட்டுமீட்ட கர்த்தர் தருநல் உடன்படிக்கை
விட்டு சிலைபொய் யுணர்வீர்நீர் -மட்டிலா

வெஞ்சினம் பற்றி கடையெல்லை தன்னிலே
வெஞ்சினத்தால் வேறாய் யெறிந்தாரே -அஞ்சாது

பொய்ச்சிலைகள் பின்பற்றி மீறியதால் என்றுசொல்லி
மெய்யார் செயல்நன் றெனவுரைப்பார் -மெய்யே

மறைவான தெல்லாமே கர்த்தரின் சொந்தம்
மறையார் நமக்களித்த இந்த -மறைநூல்

படியெல்லாம் செய்வதே நம்வழியார் நம்மின்
அடிபணிதல் என்றும் சிறப்பு

47
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
நானுனக்கு முன்வைத்த வாழ்த்துகளும் சாபமும்
ஈனர்மேல் வந்திட: உன்தேவன் -ஈனராய்

மண்ணில் துரத்தி விடப்பட்டே போயிரும்போ,
எண்ணமாறி ஈனர் திரும்பிட -மண்ணிலே

இன்றுநான் கற்பிக் கிறபடி யெல்லாமே,
என்றென்றும் நீயுமுன் பிள்ளைகள் -அன்றாடம்

உங்கள் முழுமனது ஆன்மா நிறைவோடு
தங்கி செவிகொடுத் தால்தானே -மங்காத

உன்தேவன் உந்தன் சிறையிருப்பை விட்டிரங்கி,
உன்தேவன் உன்னைச் சிதறடித்த -வன்மக்கள்

எல்லா ரிடத்தி லிருக்கும் உனைத்திரும்ப
நல்லார்ச்சேர்த் துக்கொள்ளு வார்சீராய் -நல்லாரும்

உன்னுடையோர் வானின் கடைதிசை மட்டுமாய்
வன்துரத் துண்டிருந்தால் தானுமவர் -உன்தேவன்

அங்கே இருக்கிற உன்னைச் சிறப்பாய்சேர்த்
தங்கே யிருந்து கொணர்ந்தவர் -அங்கிரு

உன்முன்னோர் காணியாம் தேசத்தை உன்காணி,
உன்தேவன் உன்னைச் சிறப்பாய்சேர்த் -தன்றவர்

நன்மைசெய்து, முன்னோரைப் பார்க்கிலும் உன்னைத்தான்
நன்றாய்ப் பெருகச்செய் வாரிறை -என்றென்றும்

உன்தேவன் தன்னை முழுமனதும் ஆன்மாவும்
அன்புகூர்ந்து நீபிழைக்க , உன்தேவன் -உன்மனதின்

வன்செய் நுனித்தோலை வெட்டி எறிவாரே
நன்றாய் வழியார்க்கும் அங்குத்தான் -வன்செய்மேல்

இந்நூலின் சாபங்க ளெல்லாம் பகைமேலும்
அந்நாளில் உன்னைப் படுத்தினவர் -எந்நாளும்

மேலே சுமரச்செய் வார்திரு. நீயங்கு
மேலாய் மனந்திரும்பு சீராக்கி -மேலவர்

கர்த்தரின் சொல்லிற் செவிகொடுத்து, கற்பிக்கும்
கர்த்தரின் கற்பனைகைக் கொள்வாய்நீ -கர்த்தர்

உனக்குநன் மைசெய் வகைசெய்த உந்தன்
வினையிலெலாம் செல்வம் கொழிக்க -நனியிறை

கர்த்தரின் சொல்லிற் செவிகொடுத்து, கற்பிக்கும்
கர்த்தரின் கற்பனைகைக் கொள்வாய்நீ -கர்த்தர்

உனதுடைய முன்மேல் மகிழ்ந்தது போல
உனைமகிழ்வார் மீண்டும் சிறந்து -நினைப்பீரே

கட்டளைகள் தூரத்தில் இல்லையே கட்டளைகள்
விட்டு மறைந்து இலையேகாண் -எட்(டு)விண்

தனையேறி யாரெமக்கு தந்திடுவார் என்சொல்
வினையது விண்ணில் இலையே - வினையாய்

கடல்கடந்து யாரெமக்கு தந்திடுவார் சொல்ல
கடல்கடந்து உள்ளதோ சொல்லே -அடைய

அருகாக வாயில் மனதில் உளதே
திருச்சொன்ன கட்டளைகள் தானே -திருவாக

வாழ்வும்சேர் நன்மையும், தீமை மரணமும்
வாழ்வுனக்கு முன்னாக வைத்தேன்நான். -வாழ்ந்து

பிழைத்துப் பெருக வளதேசத் தில்தான்
அழைதேவன் சொல்கைக்கொள் நன்று -அழைதேவன்

கேளா மனம்பேத லித்து, இழுப்புண்டு
கேளாத தேவர் பணிந்திட்டு -கோளில்

நதியோர்தான் நீகடந்து போகிற நாட்டில்
விதியது போவீர் அழிந்து -விதியிது

வாழ்வும்சேர் நன்மையும், தீமை மரணமும்
வாழ்வுனக்கு முன்னாக வைத்தேன்நான். -கீழ்பூமி

மேல்வானம் இவ்விரண்டும் சான்றாக இன்றுநான்
மேல்லும்மின் வைத்தேன் சிறந்துனக்கு - மால்மக்காள்

ஆகவே நீயும் வழியாரும் தப்பித்து
வேகமாய் வாழ்வை தெரிந்திடு, -ஈகைதந்த

முன்னோர்க்கை ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபென்
நன்னார் இறையளித்த நாடதில் -நன்றாய்நீர்

தேவனாம் கர்த்தரில் அன்புகூர்ந்து, சொல்லவரின்
மேவி செவிகொடுத்து, பின்பற்று -தேவனே

உந்தனுக்கு வாழ்வாகி நீண்டநாள் வீடுமாக
எந்நாளும் தானிருப்பார் சீர்

48
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பின்னுமவன் மோசே இசுரேலர் நோக்கியே:
இன்றுநான் நூற்றி யிருபது -நன்சேர்

வயதானோன்; நானியும் போகவரக் கூடா
இயலாக் கடப்பதுயோர் தானே -வியனாக

உன்தேவன் கர்த்தர் கடப்பாரே முன்னின்று
வன்தேச மக்கள் அழிப்பாரே; -நன்றாக

தேசத்தை கொள்ள திருச்சொன்ன யோசுவா
தேசங் கொளமுன் கடந்திட -வீசியே

கர்த்தர் அழித்த எமோரியர் சீகோன்ஓக்
கர்த்தர் அவர்தேசம் செய்ப்போல -கர்த்தர்

இனங்கள் எலாங்கொடுக்க, இங்கே விதித்த
வனக்கட் டளைபடிய ழித்து -இனமே

பலங்கொண்டு நன்றாய் திடமனதாய் ஆகி
பலங்கண்டு அஞ்சி திகைத்து -பலமில்லா

போகாதீர்; உன்தேவன் கர்த்தர்தாம் உன்னோடே
போக வருகிறார் சேர்ந்தேதான் -ஈகையார்

உன்னிறை விட்டு விலகுவதும் இல்லையுனை;
உன்னையவர்க் கைவிடுவ தும்மில்லை -என்று

திருமோசே சொன்னான் இணத்தார் செவிக்கேள்
திருசெல்வார் முன்னே சிறந்து -திருசொல்கேள்

பின்மோசே யோசுவாவை கூறி அழைத்தவன்
இன்ன இசுரேலர் எல்லார்முன், -இன்சொல்

அவனோக்கி: பிள்ளாய் பலதிடங்கொள் நன்றாய்
இவர்க்களிக்க முன்செல்வாய் நாடு -அவர்தாமே

கர்த்தர் உனக்குமுன் போயுன்னோ டேயிருப்பார்;
கர்த்தருனை விட்டு விலகாரே -கர்த்தர்

உனைக்கை விடுவ துமில்லைகாண்; அஞ்சி
இனங்கலங்கா தேநீயும் என்று -இனங்கற்க

சட்டநூல் மோசே எழுதி, அதைதிருவின்
சட்டபடி பெட்டி சுமப்போராம் -திட்டலேவி

ஆசரியர்க் கொப்புவித்து கட்டளை யிட்டதிது
தேசத்தில் வாசியும் நூல்தனை -தேச

விடுதலையின் ஆண்டாமே ஒவ்வொரு ஏழின்
முடிவிழா கூடாரம் தேர்ந்த -அடைநகரில்

எல்லாரும் சந்நிதியில் சேர்ந்தபோது, இந்நூலை
எல்லாரும் கேட்கவாசிப் பீர்நீரே -நல்லாராம்

ஆடவர் பெண்டிர் வழிவந்தோர் அந்நியர்
மேடைவாசி சொற்களைக் கற்றிட்டு -மேடைவாசி

இந்நூலின் சொற்களை அஞ்சி படிநடக்க
இந்நூலை கேட்கவாசிப் பீர்

49
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
பின்னும் திருவங்கு மோசே மரித்திடுவாய்
நன்மகன் யோசுவா கட்டளை -என்கைபெற

கூடம் அழைத்துவா; அவ்வா றிருவரும்
கூடம்முன் நின்றார்கள் ஆங்குவந்து -சாட

திருகர்த்தர் கூட முகிற்றூண் தனிலே
திருவிருவர்க் காண திருவின் -திருத்தூண்

திருக்கூட வாயில்மேல் நின்றது. கர்த்தர்
திருமோசே நோக்கி உரைத்து -கரையோய்

மரிக்கப்போ கின்றாய்நீ; இம்மக்கள் போன
திருதேசத் தில்லுள்ள தேவர் -திருவின்றி

சோரமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, செய்தவர்
தீர உடன்படிக்கை மீறுவர் -சோரம்போய்

அந்நாளில் வெஞ்சினங் கொண்டவரை கைவிட்ட
அந்நாள், முகமறைப்பேன்; தீங்குகளும் -அந்நாளில்

இக்கட்டு வன்னாய்த் தொடர்ந்திட நற்றேவன்
தக்கார் நடுவிராத தால்என்று -மக்கள்மேல்

இக்கட்டு வன்னாய்த் தொடர்ந்ததே நற்றேவன்
தக்கார் நடுவிராத தால்தானே -இக்கட்டு

எங்களை வந்துத் தொடர்ந்தது நாங்கள்போய்
மங்கிய வேறிறைபின் சென்றதால் -இங்குனக்கு

நான்தரும் இப்பாட்டை சீராய் எழுதியிதை
நான்தர சொன்னேன் இசுரேலின் -இன்மக்கள்

பிள்ளை அனைவருக்கும் கற்பித்து, இப்பாட்டு
உள்ளேவாய்ப் பாடிடயிச் சான்றாகும் -வள்ளலாய்

முன்னோர்க்கு ஆணைசெய் நன்நாட்டில் சேர்ந்தவர்
நன்றாய் புசித்துக் குடித்தங்கு -வன்னாய்

கொழுத்தபோது வேறிறை பின்பற்றி யாங்கு
விழவே உடன்படிக்கை மீறி -வழுசெய்யால்

பற்பல தீங்குகள் பற்பல இக்கட்டு
சிற்றார் அடைய அவர்வாயில் -கற்ற

திருப்பாடல் சான்றாய் ஒலிக்கும் எதிராய்
திருவறிவார் வீணர்செய் முன்தான் -திருப்பாட்டாம்

அன்றுமோசே அப்பாட்டை தானெழுதி, அங்கேதான்
நின்று படிப்பித்தான் எல்லார்கேள் - அன்றியும்

யோசுவாவை நோக்கி: பலங்கொள் திடமனங்கொள்,
ஈசனுன் னோடிருப்பார் நேர்மகனே -மாசிலா

நூல்முழுதும் மோசே எழுதி முடித்தபின்,
நூல்தனை கர்த்தரின லேவியர்க்கை: நூல்தனை

தேவ உடன்படிக்கைப் பெட்டியின் பக்கம்வை
மேவியதிர் சான்றே அதுதானே -தேவனெதிர்

உன்கலக துர்குணமும் உன்கடினக் வன்கழுத்தும்
என்றும் அறிந்தவன்; இன்றுநான் -இன்னும்

உயிரோ டிருக்கையில் கர்த்தரெதிர்; மேலாம்
செயற்கலகம் நான்செத்த பின்னே -வயதுசென்ற

மூப்பர் செவிகேட்க விண்பூமி சான்றாக
மூப்பன்நான் சொல்கிறேன் கூடிவாரும் -மூப்பன்நான்

செத்தபின்னர் நீங்கள் கெடுத்து வழிவிட
எத்தனிப்பீர் என்றறிவேன் நானிங்கு -சித்தமே

இப்பாட்டு இங்குள் இசுரேல் அவையார்க்கு
எப்போதும் சான்றாகும் என்றவன் -அப்பாட்டு

தப்பாது சொன்னான் முடியும் வரையிலே
அப்பாட்டே பின்வரும் பாட்டு

50
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
செவிகொடுங்கள் நான்பேச வானங்கள்; பூமி
செவிகொடுத் துக்கேளாய் எந்தன் -செவிச்சொல்

மழையது சிற்பயிர் மேல்பொழியு மாப்போல்
வழுவிலா போதனை கேள்மின் -அழகாய்

பனித்துளிகள் புல்மேல் இறங்குமாப் போல,
இனிதாக என்சொல் இறங்கும் -நனிதேவன்

கர்த்தர் பெயரறிவித் திட்டுநான் மேன்மையை
கர்த்தருக்கு தானே செலுத்துவீர் -கர்த்தர்

அவர்நமக்குக் கன்மலை; செய்கையில் நல்லார்;
அவர்வழிகள் எல்லாம் நியாயம், -அவர்நியாயம்

கேடில்லா உண்மையுள்ள தேவன்; அவர்தாமே
கேடில்செந் நீதி யுடையவர் -கேடிலே

மக்கள் கெடுத்துகொண்டார் தம்மைத்தாம் ஆதலால்
மக்கள் அவருடைய பிள்ளைகள் -தக்கிலை

இப்படி செய்வ தவர்செயலாம்; மாறுபாடும்
தப்பிதாறு மாறு வழிசெல்ல -அப்போ

விவேக மிலாத மதிகெட்ட மக்காள்,
இவையோ விடைதரும் வீதம் -அவரன்றோ

உன்னையே ஆட்கொண்ட தந்தையும்? உண்டாக்கி
உன்னை நிலைசீரன் றோஅவர்? -உன்கண்கள்

முன்சென்ற நாட்கள் நினைந்து; தலைமுறையாய்ச்
சென்றாண்டு எல்லாம் கவனிப்பாய்; -உன்தந்தை

தன்னைக்கேள், சொல்லறி விப்பானே; உன்மூப்பர்
தன்னைக்கேள், சொல்லறிவிப் பார்கேளீர் -நன்றாக

நல்லார் இனங்களுக்குத் தேசங்கள் பங்கிட்ட
எல்லா வழியாராம் ஆதாமின் -நல்வேளை

வெவ்வேறாய்ப் நல்லார் இசுரேல் தொகைத்தக
அவ்வாறு எல்லை பிரித்தாரே -அவ்வினமே

மக்களவர் கர்த்தரின் பங்காமே; யாக்கோபு
மக்கள் அவருடைய காணிவீதம் -மக்கள்

அலைந்த நிலத்திலும் பாலையில் கண்டு
நிலைநடத்தி கண்மணிபோல் காத்தார் -நிலைமேல்

கழுகுதன் கூட்டைக் கலைத்து, சிறார்மேல்
கழுகும் அசைவாடி, செட்டை -அழகாய்

விரித்து, அவையெடுத்து, தன்செட்டை மேலே
இருத்திசுமந் தாற்போல் நடத்தி -விரிநஞ்சே

அந்நிய பொய்ச்சிலை எங்கும் இருந்ததிலை.
இந்நாள் உயர்ந்த இடங்கள்மேல் -விந்தையாய்

பண்ணினார் ஏறிவர; நல்விளைச்சல் தந்தாரே;
எண்ணெயையும் பாறை வடித்துத்தான் -மண்மேலே

கன்மலை தன்னிலுள்ள தேனையும், கற்பாறை
தன்னின் வடிநெய்யும் உண்ணதந்தார். -நன்றாமே

வெண்ணெய்பால் ஊன்நெல்லும் கோதுமை, சாறையும்
உண்ணதந்தார் நல்லிறை வன்தானே -உண்டு

கொழுத்து உதைத்தான் யெசுரன்; கொழுத்து,
கொழுத்த நிணமுண்ட பின்னர், -வழுவி

பிறப்பித்த தேவனை விட்டு, மலையாம்
சிறப்பான மீட்பரை விட்டு -கறையான

அந்நிய பொய்ச்சிலையால் மூட்டி எரிச்சலாக்கி
அந்த அருவருப்பில் எல்லாமே -விந்தி

சினமாக்கி; தேவ பலியிடாது பேய்க்கே
இனமும் பலியிட் டனர்வீண் -இனமேநீ

உன்னை பிறப்பித்த கன்மலையை விட்டுநீ
உன்னைபெற்ற தேவன் நினைமறந்தாய். -தன்னார்

சினஞ்செய்த தாலே மனமடிவாய், கீழார்
சினத்தால் புறக்கணித்தேன் சீர்நான் -சினந்து

முகமறைப்பேன்; கீழார் முடிவுபார்ப்பேன் என்றும்
இகத்தில் பெருமாறு பாடுள் -வகைவழி

உண்மையில்லா பிள்ளைகள். தெய்வமல்லா வீண்சிலை
பண்ணி எரிச்சலை மூட்டவே -பண்ணியோர்

மாயையால் என்னைச் சினமூட்டி விட்டதால்
தீய எரிச்சலை உண்டாக்கி, -வேய

மதிகெட்ட மக்களால் மக்கள் சினஞ்செய்
வதேயென் விடையாம் இவர்க்கு -அதனால்

சினந்தீ யதுபற்றி தாழ்ந்த நரகம்
கனன்றெரியும்; பூமியையும், சேர்ந்தே -இனபலனும்

சேர்த்தழித்து, மேம்மலை கீழடி வெந்திடும்.
சேர்க்குவி தீங்கவர் மேலேதான் -சேர்த்தழிக்க

என்னுடைய அம்புகளை யெல்லாம் அவர்கள்மேல்
கொன்றிட எய்தே பசிவாட்டி -வன்சூடும்

வாதைகளும் வந்து மரிப்பார்கள்; வன்கொடிய
தீதாய் விலங்கை அனுப்புவேன் -வாதை

நகர்வெளியில் வாட்களும், உள்ளேயோ அச்சம்,
நகர்வாழும் வாலிபன் கன்னி -அகத்துள்

குழந்தை, நரைத்த கிழவன் அனைவர்
அழிக்கும் நிலையஞ்சி செத்து -அழிக்கவே

எம்கை உயர்ந்ததென்றும், கர்த்தர் புரியவில்லை
தம்வேர் பகைஞரோ தப்பாக -தம்புகழ்

எண்ணங் கொளச்சொல்வர், ஆயின் பகைவரின்
எண்ணமது தீதே அதுயென்றும் -எண்ணம்

பகைவரின் எண்ணமது தீதென் பதாலே
இகத்தில் சிதறி பெயரற் -றகவிலக்கி

போகச்செய் வேன்என்று சொல்லி யிருப்பேனே.
ஆக பகையால் விடுத்தேன்நான் -வேக

அவர்கள்தம் எண்ணமெலாம் கெட்டு உணர்வில்
லவருக்கு. ஞான முணர்ந்து -அவர்தம்

முடிவுதனை எண்ண நலமா யிருக்கும்
இடியாய் உரைத்தார் இறைவன் -நெடிய

மலையான கர்த்தர் அவர்களை விற்கா
வலைக்கீழே கர்த்தர் கொடாமல் -நிலைத்தால்

ஒருவனோ ஆயிரம் பேரைத் துரத்த,
இருவரோ பத்தா யிரமோ? -திருவவர்

தங்களின் கன்மலை நம்மலை போலல்ல
மங்கி பகைவர்கள் தீர்க்கிறார்கள் -மங்கு

சொதோமின் கொமோரா விடவுமாய் தாழ்ந்த
விதங்கனி யெல்லாம் கசந்து -விதமாகச்

சாறது நஞ்சே விரியனின்; பெட்டகத்தில்
சாறது முத்திரை போட்டவர் -வேறாக

வைத்திருக்க வில்லையோ? எப்போதும் கர்த்தருக்கே
வைத்துரிய வாங்கு பழியெலாம் -வைத்த

பழியும் விடையளிப்பும் கர்த்தர்க் குரிய
பழிவாங்கும் ஏற்றகாலம் கால்கள் -அழிந்திட

தள்ளாடும்; ஆபத்(து)நாள் கிட்டி யிருக்கிறது;
மெள்ளவரா தீவிரிக் கும்தானே -கள்ளத்தால்

தேவன்தம் மக்கள் நியாயந்தீர்த் தேபெலன்
மேவியே போயிற்று, நல்லவர் -தீவிரமாய்

காணவும் ஊழியர்மேல் வைப்பார் இரக்கங்கள்
வீணாம் சிலையெங்கே என்றுகேட்டு -வீணச்

சிலைகள் எழுந்து உதவிசெய்து மக்கள்
நலமறைவாய் தங்கட்டும் என்று -சிலையெள்ளி

நான்நானே தேவன், தவிரவேறு தேவனில்லை
நான்கொன்று பின்னுயிரச் செய்திடுவேன் -நான்தானே

புண்படுத்தி, நானே குணமாக்கும் நல்தேவன்
மண்ணிலென் கைக்கெவரும் தப்புவிப்பார் -மண்ணிலிலை.

என்கரத்தை வானத்தில் நேரா யுயர்த்திட்டு
என்றென்றும் வாழ்வேன் உரைத்தாரே -என்றென்றும்

மின்னும்என் வாளை கருக்காக்கி, என்கையது
நன்றாய் நியாயம் பிடித்திட, -என்பகைவர்

மண்பழி வாங்கியே, என்னைப் பகைப்போரை
தண்டிப்பேன் சீரார் உரைத்தாரே -தண்டனையாய்

மக்கள் கொலையுண்டும் எங்கோ சிறைப்பட்டும்
தக்காரும் போனவரின் செந்நீரால் -தக்கயென்

அம்புகள் கொள்செய் வெறியே; இரும்வாளோ
உம்பகையின் தின்னும் நிணம்தனை -உம்மின்

தலைவர் முதலாய் பகைவர் நிணத்தை
கலைவாள் புசிக்க திருச்செய் -நிலவிறை

தம்பகை தண்டித்து ஊழியர்க்காய் வாங்குபழி
தம்தேச மேலே இரங்குவார் -அம்மான்கள்

மோசேயும் நூனின் திருமகன் யோசுவாவும்
வாசித்தார் இப்பாட்டின் சொற்களை -தேசத்தின்

மக்கள் செவிகேட்கத் தக்கதாகச் சொன்னார்கள்.
மக்கள் செவிகேட்டார் பாட்டு

51
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
மோசே திருச்சொல் இசுரேலே கேள்சொல்லி
மோசே உரைத்தான் கடையிலே -தேசமே

இந்நூலின் சொல்படி எல்லாம் வழியார்கள்
எந்நாளும் வையும் மனதுமது -அந்தோ

முடியாத செய்கை இலையே மனதில்
படிய திருச்சொல் உயிரே -கடந்து

நதியோர்தான் விட்டுச் செலுந்தேசத் தில்நீர்
விதிவாழ்வீர் நீடித்து வாழ்வு -நதியின்கீழ்

அந்நாளில் தானே திருகர்த்தர் மோசேகேள்:
இந்நாளில் மோவாப் அபாரீமென்(ற) -அந்ததொடர்

தன்னில் மலைநேபோ ஏறி இனம்கைபெறும்
நன்நாட்டை கண்ணாலே பார்மகனே -என்னமோ

சீன்வன காதேசில் மேரிபாவின் நீரருகே
ஏன்யின மக்கள்முன் தூய்செய்யா -ஏன்போனீர்

என்கட் டளைகளை மீறிய தாலேநீ,
உன்தமன்போல் இம்மலையில் செத்திடுவாய் -இன்றிங்கு

நாட்டைநீ கண்டாலும் உட்புக ஏலாது
நாட்டை எரிகோ எதிராக -வாட்டங்காண்

கண்களால் கண்டிடு நேபோ மலைமேலே
விண்ணார் தரும்சீராம் நாடு

52
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
தேவனின் மாந்தன் திருமோசே சாகுமுன்னே
தேவ இனத்தார் இசுரேலை -தேவமாந்தன்

வாழ்த்தினான் மோவாப் சமவெளியில் ஆங்குதான்
வாழ்த்திய வாழ்த்து இதுதானே -வாழ்த்திட

கர்த்தரவர் சீனாயில் தானே எழுந்தருளி,
கர்த்தரவர் சேயீரில் தானிருந்து -கர்த்தர்

உதயமா னாரே; மலைபாரான் மேலே
உதித்து ஒளிவிட்டார் சீரும் -உதித்தவர்

பத்தா யிரங்களான தூயரோடே வீசொளி
தக்கார் அவர்க்காக தீப்போல -தக்கநூல்

வந்தவ் வலது கரத்தினின்று; மெய்யாமே
இந்தமக்கள் மேல்வைத்தார் அன்புதனை -அந்தவரில்

தூயரவர் எல்லாரும் உம்முடைய கையிலிருத்
தூயர் கழலில் விழுந்தும்மின், -தூயசொற்கள்

கற்பாரே தூயரும் போதனை ஆங்கடைவர்
கற்பித்தான் மோசேயின் னூல்தனை -கற்பித்த

நூலது யாக்கோப் அவைக்கது சொந்தமாகி.
நூலார் தலைவர் குலத்தார்கள் -சீலாகக்

கூடிய போழ்து யெசுரனுக்கு நல்லரசன்
நாடவர் தானே இறைவனார் -நாடில்

திருரூபன் சாவா பிழைக்கட்டும்; கொஞ்ச
மிராது இனமவனின் மக்கள் -திருயூதா

தன்னை குறித்தவன்: கர்த்தாவே, யூதாவின்
மன்றாட்டு சத்தத்தைக் கேட்டவர் -தன்னே

அவன்தனது மக்களோடு சேரச்செய் வீரே
அவன்கை பலத்திடட்டும் என்றும்; -அவனின்

பகைவர்க் கவனைநீர் நீங்கலாக்கி மீட்கும்
வகையுதவி செய்பவ ராகி -சிகைக்குலம்

லேவி குறித்தவனும்: நீமாசா தன்னிலே
மேவியே சோதித்த மேரிபாவின் -சீவநீர்

வாக்குவாதம் பண்ணின தூயவுன்கை தும்மிமூரீம்
வாக்குரை நிற்க நிலைத்திடும் -வாக்கே

தகப்பனுக்கும் தாய்க்கும்: இனிபாரேன் என்றும்
சகோதரர் சேர்க்காமல் பிள்ளை -அகமறியோர்

கையில் அவைகள் இருக்க; அவர்களும்சொல்
கையிலே கொண்டுகாப் பாரவர் -கையிற்சேர்

யாக்கோபுக் கும்நேமம் இந்நூல் இசுரேல்கேள்
ஆக்க பிரமாணம் போதித்தே -ஆக்கிட்டார்

உம்மின் திருசந் நிதியிலே தூபவர்க்கம்
உம்பீடத் தில்நல் பலியிட்டு -உம்முன்நில்

கர்த்தாவே, செல்வமவன் வாழ்த்தி, அவன்செயலில்
கர்த்தாவே அன்புகூரும்; வன்பகையை -கர்த்தர்,

திரும்ப எழுந்திராத வண்ணம் இடுப்பை
திருநொறுக்கி விட்டுவிடட் டும்வீண் -திருகுலம்

பென்யமீன் சீர்குறித்து: கர்த்தருக்கு அன்பானோன்
என்றும் அவரோடே தங்கிசுகித் -தென்பவனை

பென்யமீன் சீர்குறித்து: கர்த்தருக்கு அன்பானோன்
என்றும் அவரோடே தங்கிசுகித் -தென்பவனை

என்றும் அவர்காத்து எல்லைக்குள் வாழ்வாரே;
நன்யோசேப்(பு) சீர்குறித்து: கர்த்தரால் -நன்றாக

வானத்தின் செல்வமும், வீழ்பனியும், ஆழத்தின்
தேனாக நீரூற்று தேசத்தில் -மேனாளும்

ஆதவன் பக்குவம்செய் நற்கனிகள் பெற்றிடட்டும்
மாதறிவி திங்கள் அருமைபலன் -மேதவர்

பெற்றிடட்டும், செல்வமெலாம் நாடும் அதின்நிறைவும்
பெற்றிடட்டும் நெல்வளமும் பெற்றிட -நற்றவர்

முட்செடியில் வந்து எழுந்தருளி யோர்தம்மின்
திட்டதயை யோசேப் சிரசின்மேல், -நட்டான்

சகோதரரில் உச்சந் தலைமேல் வரட்டும்
வகையணி நல்லதலை ஏறாம் -வகையோனின்

கொம்புகள் காண்டா மிருகத்தின் கொம்பைப்போல்
தெம்போடு மக்களை ஏகமாய் -தம்தேச

எல்லை கடைமட்டும் முட்டித் துரத்துவான்
நல்லவிரு பல்லா யிரமாமே -நல்லாண்

செபுலோன் குறித்து: செபுலோன் வெளியே
சபைபுறப் பட்டுப்போ கையில், -சபைஇசக்கார்

கூடாரந் தங்கி மகிழ அனைஅழைத்து
நாடாருக் குன்றில் பலியிடுவார் -நாடும்

கடல்களில் உள்ள திருவெலாம் மண்ணில்
இடம்மறை செல்வமெலாம் கொள்வர். -திடகாத்து

பேரிடத்தைக் கைக்கொடுப்பார் போற்றுவோம்; சிங்கம்போல்
பேரிடத்தில் தங்கியவன் பீறுவான் -பேரில்

தனக்காய் முதலிடம்பார்த் தேர்ந்தான் இனத்தான்
தனக்கு நியாய நலமாய் -இனபங்கு

பத்திர மாயிருக்க; முன்னணியாய் வந்தவன்,
மத்தவர்ப் போரை நடத்துவான் -அத்தவன்

தாணைக் குறித்தவன்: தாண்ஒரு பாலசிங்கம்,
தாணவன் பாசானின் பாய்வானே -மேணாளாம்

நப்தலி சீர்குறித்து: நப்தலி கர்த்தரின்
ஒப்பில் தயவை அடைந்திடுவான் -ஒப்பில்

அவருடைய வாழ்த்தால் நிறைந்திருப்பான் மேற்கும்
அவர்தரும் தென்திசையும் காணி -இவனாக்க

ஆசேரோ தேசத்தில் பிள்ளைநிறை பெற்றவன
தேசநெய்யில் தன்கால்தோய்ப் பான்கேள்மின் -தேச

இரும்பும்சேர் வெண்கலமும் உன்கா லணிகீழ்
இரும்நா ளெலாம்சீர் பெலன்

53
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
இலையே யெசுரனின் தேவன்போல் எங்கும்
மலையே இசுரேல் இனத்தார்க் -குலமெலாம்

வானங்கள் மேலும் தமதுடைய மாட்சிமை
வானதிரு மண்டல மேலேறி -வானார்

வருகிறார். ஆதியிலா தேவன் திருவே
மருவில் அடைக்கலம் உந்தன் -வருமவர்

ஆதியிலா தேவனின் நன்புயங்கள் ஆதாரம்;
தோதாய் உனக்குமுன் னின்றவர் -தீதாம்

பகைதுரத்தி, கட்டளை தந்திடுவார் சீறி
பகையழித்து வாசம் தனித்து -இகத்திலே

யாக்கோபின் ஊற்றது நெல்லும் கனிச்சாறும்
தாக்கியலார் தேசத்தில் தானிருக்கும்; -தேக்கமிலா

வானம் பனியைப் பொழியும் சிறப்பாக
ஈனமிலை தேசத்தில் கேளமின்னே -மான

இசுரேலே, நீபேறு பெற்றோன்; திசையில்
மிசைமீட்ட கர்த்தரின் மக்கள், -திசையில்

உனக்கொப்பு யாரோ? உனக்கு உதவும்
நனிகேட யம்மவரே வாள்போல் -இனிமேல்

பகைவர்கள் உன்னெதிர் இச்சகம் பேசி
வகையடங்கிப் போவர்; அவர்கள் -அகமாமே

மேடு தனைமிதிப்பாய், என்று உரைத்தனன்
ஈடிலா வாழ்த்தைத் திரு

54
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
திருமோசே மோவாப் சமவெளியில் நேபோ
வரைமலைமேல் உள்ள பிசுகா -இரும்பேர்

கொடுமுடியில் ஏற திருகர்த்தர் காட்ட
கொடுதேசம் எல்லை யெலாமே -இடங்கீழே

கீலேயாத் தாண்மட்டும் தேசம் அனைத்தையும்,
சீலாராம் நப்தலி தேசமெலாம் -மேலே

மனாசேசேர் எப்பிராயீம் என்பவர் தேசம்,
இனயூதா தேசம் கடலும் -இனதேசம்

தென்புற சோவார் வரையுள்ள ஈச்சமர
நன்நகரும் பள்ளம் எரிகோவும் -மன்னவர்

பூமியெலாம் காண்பித்து மூன்றுமூப்பர்ச் சந்ததிக்குக்
பூமியாணை தேசம் இதுதானே -பூமியில்

இன்றுனது கண்காணச் செய்தேன்நான்; ஆனாலும்
நின்ற யிடத்தில் மரிப்பாய்நீ -என்றார்;

இடத்திற்குக் போகாய் கடந்துநீ என்றார்.
இடத்தில்தான் மோசே மரிக்க -அடக்கம்செய்

மோவாப் திருதேச பெத்பேயோர் பள்ளத்தில்
தேவன் அடக்கஞ்செய் தாருடல் -தேவன்செய்

தவ்விடம் இந்நாள் வரைக்கும் ஒருவனும்
எவ்வா றறியா தடமாமே -அவ்வாண்

மரிக்கும் பொழுது திருமோசே நூறும்
இருபத்தும் சீர்வயதே; கண்கள் -இருளாகா

சிற்றும் பெலன்குறையா நல்ல நிறையோனாய்
நற்றாண் மரித்தான் சிறந்தங்கு -நற்றார்

இசுரேல் இனத்தவர் மோவாப் வெளியில்
இசுரேலின் மோசே மரணம் -வசைபாடி

ஐயகோ ஐயகோ என்றவர் ஆங்கேதான்
ஓயவொரு மாதம் அழு(து)முடித்து -வேயாண்

திருவுள யோசுவா சீர்மகன் நூனின்
திருத்தலை மேலே திருவும் -திருக்கை

யிடவும் அவனுள்ளே ஞானத்தின் ஆவி
யடங்கி நிறைந்தனன் சீராண் -படிந்தே

இசுரேல் இனத்தார் அவனுக்குக் கீழாய்
விசும்பின் மகனாமே மோசே -திசைதனில்

இட்ட திருகர்த்தர் கட்டளை யிட்டபடி
நட்டார் படிந்தனர்; அன்றியும் ஆங்கே

எகிப்தெனும் தேசத்தில் பார்வோன்சேர் வேலை
திகைக்கவே அத்தேசம் செய்ய -வகைபேர்

அடையாளம் அற்புதம்செய் வாக்கர் எவரும்
கடைபார்க்கின் வேறே இலர்கேள் -இடத்தில்

முகமுகமாய் கர்த்தரை கண்டறிந்த மோசே
இகமாம் இசுரேலில் இன்றும் -முகம்பார்க்கும்

வாக்கர் எழும்பின தில்லையென்று இன்றறிவோம்
வாக்கரில் மோசே தலை

55
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

Comments

Popular posts from this blog

வேதாகம உபாகமம் - வெண்பா வடிவில்